Top
undefined
Begin typing your search above and press return to search.

மருத்துவர்கள் வேண்டாம் என கூறியும் விளம்பரத்திற்காக வாஜ்பாயை மருத்துவமனையில் சந்தித்து பிறகு தம்பட்டம் அடித்த ராகுல் காந்தி

மருத்துவர்கள் வேண்டாம் என கூறியும் விளம்பரத்திற்காக வாஜ்பாயை மருத்துவமனையில் சந்தித்து பிறகு தம்பட்டம் அடித்த ராகுல் காந்தி

By :

  |  14 Jun 2018 3:35 AM GMT

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் உடல்நிலை குறித்து விமர்சித்ததற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பா.ஜ.க-வின் பெரும்பலமாக விளங்கிய வாஜ்பாய் அவர்களின் மருத்துவமனை அனுமதியை தன் சொந்த கட்சியின் கலாச்சாரத்தை உயர்த்துவதற்காக பயன்படுத்தி கொண்டுள்ளார் ராகுல்.
நாங்கள் வாஜ்பாய் அவர்களுக்கு எதிராக போட்டியிட்டோம். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் எனவே முதன்மையான பணியாக அவரை சென்று சந்தித்தேன் ஏனெனில் நான் காங்கிரஸ் கட்சியின் பாதுகாவலன். வாஜ்பாய் அவர்கள் இந்த நாட்டுக்காக உழைத்தவர் நாங்கள் அவரை பிரதமராக இருந்தமைக்காக மதிக்கிறோம். இது தான் எங்களின் கலாச்சாரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மும்பையிலிருந்து. -  ANI

https://twitter.com/ANI/status/1006507783003369472
மும்பையில் நடைபெற்ற பேரணியொன்றில் பேசிய போது ராகுல் சொன்னது "தற்போது வாஜ்பாய் உடல் நிலை குன்றியுள்ளார். யார் முதலில் சென்று அவரை பார்த்தது? நான் சென்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் எங்களுக்கு எதிராக போட்டியிட்டவராக இருந்தாலும், அவர் நாட்டின் நலனை கட்டமைப்பதற்காக உழைத்தவர்". மேலும், "அத்வானி, மோடி அவர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் நான் பார்த்த நிகழ்வுகளில் மோடி அவரின் குருவுக்கு போதிய மரியாதையை கூட அளிப்பதில்லை. இந்நிலையில் அத்வானி அவர்களுக்காக நான் வருத்தமடைகிறேன். மோடி கொடுத்ததை விடவும் அத்வானி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிக மரியாதையை வழங்கியுள்ளது." என கூறியுள்ளார்.
ஆனால் கடந்த காலங்களில் நரசிம்ம ராவ், முன்னாள் பிரதமர் பொருளாதாரத்தில் தாரளமயமாக்கல் எனும் சாம்ராஜ்யத்தை துவங்கி வைத்த பெருமைக்குரியவர், காங்கிரஸ் கட்சி இவரை எப்படி மோசமாக நடத்தியது என்பதை மக்கள் வெகு விரைவாக சமூக ஊடகங்களின் மூலம் இவர்களுக்கு புரியவைத்துவிட்டனர்.
நீங்கள் உங்கள் கட்சியின் கலாச்சாரம் குறித்து பேசுகிறீர்கள். டெல்லியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் எவ்வளவு வெட்ககேடான முறையில் சோனியா காந்தி பிவி. நரசிம்மராவின் பூதஉடலை நிராகரித்தார்?

https://twitter.com/rishibagree/status/1006522748833681408
நீங்கள் பொய்யுரைக்க வேண்டாம். எங்களுக்கு உங்கள் கலாச்சாரம் குறித்து தெரியும். முன்னாள் பிரதமர் பிவி நரசிம்மராவ் அவர்களுக்காக காங்கிரஸின் தலைமையகத்தின் கதவுகள் உங்கள் தாயாரால் எந்தவிதத்தில் மூடவைக்கப்பட்டிருந்தன என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் உங்கள் சொந்த மரணத்தையே தாழ்த்தி கொண்டிருக்கிறீர்கள்.

https://twitter.com/TrulyMonica/status/1006523566416789504
எய்ம்ஸ் மருத்துவமனை வாஜ்பாய் அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை சந்திக்க வேண்டாம் என வெளிப்படையாகவே வேண்டிக்கொண்டதாக முன்னாள் காங்கிரஸின் தலைவர் செஹ்ஷாத் பூனாவாலா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த கோரிக்கையை நிராகரித்து ராகுல் காந்தி வாஜ்பாய் அவர்களை சென்று சந்திதுள்ளார். இது வெறும் அரசியல் புள்ளிகளை அள்ளுவதற்காக நடத்திய நாடகம்.
இதை உங்களிடம் சொல்வதற்காக நான் வருந்துகிறேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை அடல்பிகாரி வாஜ்பாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை சந்திக்க வேண்டாம் என ராகுல்காந்தியிடம் கேட்டுகொண்டது.
அந்த கோரிக்கையை நிராகரித்து, வெறும் அரசியல் நோக்கத்திற்காக சென்று சந்தித்துள்ளார். 
இந்த சந்திப்பு குறித்த பெருமையை அவர் பறைசாற்றி கொள்ளும் சமயத்தில் இதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

https://twitter.com/Shehzad_Ind/status/1006510818979008512
மேலும் ஷெஹ்சாத் கூறும்போதும் ஏய்ம்ஸை பொருத்தவரை இரவு 7:30 மணிவரை அவருக்கு சில பரிசோதனைகள் கொடுக்கப்பட வேண்டியிருப்பதால் நலம் விரும்பிகள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், ராகுல் இதற்கு செவி மடுத்ததாக தெரியவில்லை.
இதோ உண்மை:
இரவு 7:30 மணி அல்லது அதற்கு மேல் வரை சில பரிசோதனைகள் இருப்பதால் வாஜ்பாய் அவர்களை யாரும் சந்திக்க வேண்டாம் என எய்ம்ஸ் கேட்டுகொண்டுள்ளது.
ராகுல் காந்திக்கும் இது தெரியும் ஆனாலும் அவர் சென்று சந்தித்துள்ளார் காரணம் அவர் அரசியல் புள்ளிகளை அள்ளவேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் இந்த விதியை கடைப்பிடித்துள்ளனர். ஆனால் உடல்நிலை சரியில்லாத வாஜ்பாய் மீது அரசியலை படர்த்தியிருக்கிறார் ராகுல்

https://twitter.com/Shehzad_Ind/status/1006528812123750400
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பொது வெளியில் தன்னை தானே சங்கடமான சூழலில் சிக்க வைத்துக் கொள்வதே சமீபகால வரலாறு. சமீபத்தில் கூட கொக்ககோலா எனும் குளிர்பானத்தின் நிறுவனர் அமெரிக்காவை சேர்ந்த ஷிக்கன்ஜி வணிகர் என அவர் தெரிவித்து தன்னை தானே கேலிக்குள்ளாக்கி கொண்டார். 2014-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் கட்சியினரால் அவருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் இன்று கூட பிவான்டி நீதிமன்றம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Translated from - OpIndia.
Next Story