Top
undefined
Begin typing your search above and press return to search.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், வெவ்வேறு தீர்ப்புகளை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், வெவ்வேறு தீர்ப்புகளை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்

By :

  |  15 Jun 2018 2:34 PM GMT

சில மாதங்களுக்கு முன், டி.டி.வி.தினகரன் - சசிகலா பிரிவிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். அப்பொழுது, அ.தி.மு.க கட்சியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக கைப்பற்றினர். இந்த சமயத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க-விலிருந்து டி.டி.வி.தினகரன் பிரிவில் சேர்ந்தனர். அதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் தனபால் இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தார். இந்த பிரச்சனை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் தீர்ப்பு நேற்று வெளியானது.
இந்த தீர்ப்பை இரண்டு நீதிபதிகள் வழங்கினார். ஒரு நீதிபதி சபாநாயகருக்கு ஆதராகவும், மற்றொருவர் சபாநாயகருக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கினர். தலைமை நீதிபதி இந்திரா பானெர்ஜீ, நீதிமன்றத்தால் சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்றும் அவரது தீர்ப்பு ஏற்புடைய காரணங்களால் எடுக்கப்பட்டது என்றும் இதனால் இந்த தகுதி நீக்கம் செல்லும் என்று கூறினார். ஆனால் மற்றோரு நீதிபதி சுந்தர், சபாநாயகரின் தீர்ப்பான தகுதி நீக்கம் செல்லாது என்று கூறினார்.
இதனால் இந்த தீர்ப்பின் முடிவு தெரிய மூன்றாவுது நீதிபதி தன்னுடைய தீர்ப்பை கூற வேண்டும். அவருடைய தீர்ப்பு இறுதியாக இருக்கும். தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பை வழங்கியதால் அவரால் மூன்றாவது நீதிபதியை தேர்வு செய்ய இயலாது. இதனால் மூன்றாவது நீதிபதியை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மிக மூத்த நீதிபதியான ஹுலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்று தலைமை நீதிபதி இந்திரா பானெர்ஜீ அறிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு டி.டி.வி.தினகரனுக்கு சாதகமாக வந்திருந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாமல் போயிருக்கும். டி.டி.வி.தினகரன் திராவிட முன்னேற்ற கழகத்துடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வரலாம் என்றும் பேச பட்டது. ஆனால் தீர்ப்பு இருவருக்கும் சாதகமாக வராததால் பழைய நிலைமையே நிலவுகிறது.
இதே நேரத்தில் மற்றொரு செய்தியும் பேசப்படுகிறது. தீர்ப்பு எவ்வாறு வந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அ.தி.மு.க-வுக்கே சாதகமாக செயல்படலாம் என்றும் ஒரு செய்தி உள்ளது. இதை பற்றி முன்பே எங்கள் கதிர் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளோம். அந்த பதிவை இங்கு படிக்கலாம்.
Cover Pic Courtesy - Dinamalar.
Next Story