Top
undefined
Begin typing your search above and press return to search.

வீரபாண்டி மற்றும் புதுப்பாளையம் ரயில் நிலையங்கள் மீண்டும் இயங்கும்: கோவை மக்களுக்கு மோடி அரசின் அடுத்த பரிசு

வீரபாண்டி மற்றும் புதுப்பாளையம் ரயில் நிலையங்கள் மீண்டும் இயங்கும்: கோவை மக்களுக்கு மோடி அரசின் அடுத்த பரிசு

By :

  |  15 Jun 2018 2:13 PM GMT

கோவை - மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தடத்தில், வீரபாண்டி மற்றும் புதுப்பாளையம் ரயில் நிலைய நடைமேடைகள் புனரமைக்கப்பட்டு மீண்டும் இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வழி வகை செய்யப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹென் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை வடக்கு ரயில் நிலையமும் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கோவை - மேட்டுப்பாளையம் வரை இயங்கும் ரயில்கள், கோவை சந்திப்பில் துவங்கி, கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. தற்போது வீரபாண்டி மற்றும் புதுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில், ரயில்கள் நின்று செல்வதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும்.


கோவை - பெங்களுர் 25 வருட தேவையான உதய் ரயிலை துவக்கியுள்ள நிலையில் தற்போதைய இந்த அறிவிப்பு கோவை மக்களுக்கு மோடி அரசு அளிக்கும் அடுத்த பரிசாகவே அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Next Story