Top
undefined
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

By :

  |  16 Jun 2018 5:44 AM GMT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தால் பயனடைந்தவர்களிடம் உரையாடல் மேற்கொண்டார். இந்திய நாட்டிற்கு டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்குவதும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கல்வி மற்றும் தகவல்களை வழங்குவதும், அரசின் ஆவணங்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கங்கள் ஆகும்.
பிரதமர் மோடி நேஷனல் நாலேஜ் நெட்ஒர்க் மூலம் 1700 கல்வி மற்றும் ஆய்வு மையங்கள் மற்றும் நூலகங்களை மாணவர்களுடன் இணைக்கபட்டதை கூறினார். மின்னணுவியல் உற்பத்தியை ஊக்கமளித்தது மூலம் மொபைல் கைபேசி உற்பத்தி மற்றும் அதன் உறுப்புகளின் உற்பத்தி மையங்கள் பல மடங்குகளாக கடந்த 4 வருடங்களில் பெருகியது என்றும் இதனால் 4.5 லட்சம் மக்களுக்கு வேலை கிடைத்தது என்றும் கூறினார்.
இந்த திட்டத்தால் 3 லட்சம் பொதுசேவை மையங்கள் உருவாக்கப்பட்டது என்றும் இதனால் பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்பதை பற்றியும் கூறினார். மேலும் இந்த பொதுசேவை மையங்களால் பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேவை வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
இதற்க்கு முன் பிரதமர் மோடி, பிராதான் மந்திரி உஜ்வாளா யோஜனா(இலவச சமையல் எரிவாயு), பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா(மக்கள் மருந்தகம்), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(அனைவருக்கும் வீடு திட்டம்) ஆகிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் உடனும் உரையாடல் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story