Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க பொதுகூட்டத்திற்காக நடைபாதைகளை உடைத்து கொடி கம்பங்களை நட்டு சென்னையில் உச்சக்கட்ட அராஜகம் - சேதத்தை சரி செய்ததாக நாடகம் - ஒரே நாளில் மீண்டும் பிளந்த தி.மு.க அடைத்த ஓட்டைகள்!

தி.மு.க பொதுகூட்டத்திற்காக நடைபாதைகளை உடைத்து கொடி கம்பங்களை நட்டு சென்னையில் உச்சக்கட்ட அராஜகம் - சேதத்தை சரி செய்ததாக நாடகம் - ஒரே நாளில் மீண்டும் பிளந்த தி.மு.க அடைத்த ஓட்டைகள்!

By :

  |  18 Jun 2018 2:28 PM GMT

தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது. இதற்காக, சென்னை ஈகா தியேட்டர் - கோயம்பேடு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும் சேதப்படுத்தியும் பேனர்களும் கொடிக் கம்பங்களும் நடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறப்போர் இயக்கம் ட்விட்டரில், `புதிய கிரானைட் நடைபாதையைச் சேதப்படுத்தி கொடிக் கம்பங்கள் நட்டுள்ளதற்கு நன்றி. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது’ எனப் பதிவிடப்பட்டது.
இந்த செய்தியும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவ, இணையவாசிகள் தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற அராஜகங்கள் தலைதூக்குமோ என்ற தங்களது அச்சத்தை பதிவிட்டு வந்தனர். இந்த எதிர்ப்பை சரி செய்ய இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் “நடந்த சிரமத்துக்கு மன்னிக்கவும். எங்களால் ஏற்பட்ட சேதத்தை எங்கள் கட்சித் தொண்டர்கள் சரி செய்வார்கள். மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாது. சேதங்களைச் சரி செய்த புகைப்படம் விரைவில் பதிவிடப்படும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என டுவிட்டரில் பதிவிட்டார்.
பிறகு, அந்தப் பகுதிகள் சீரமைக்கப்பட்டுவிட்டதாகத் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சேதமடைந்த இடங்களை எங்கள் குழுவினர் வெற்றிகரமாகச் சரி செய்துவிட்டனர். எந்த ஒரு பகுதியும் சரிசெய்யப்படாமல் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற தவறு இனி நடைபெறாது என்பதுக்கு நான் உறுதியளிக்கிறேன். நன்றி” என்று தெரிவித்தார்.
ஆனால் இதில் வேடிக்க என்னவென்றால் கிரானைட் கற்களை பிளந்த தி.மு.க-வினர் அந்த ஓட்டைகளை சிமெண்ட்டை கொண்டு கடனுக்கென்று அடைத்து அவசர அவசரமாக புகைப்படங்களை வெளியிட்டு பெயர் பெறுவதிலேயே மும்முரமாக இருந்தனர். அடுத்த நாளானே இன்றே தி.மு.க அடைத்த ஓட்டைகள் மீண்டும் பிளக்க ஆரம்பித்த இவர்களின் லட்சணம் அம்பலமானது தான் மிச்சம்.
https://twitter.com/swamisaranamm/status/1008665814096998400
Next Story