Top
undefined
Begin typing your search above and press return to search.

பட்டினியை தாங்க முடியாமல் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை, இறந்த உடலை தகனம் செய்ய இடம் இல்லை: "பிண"ராய் ஆளும் கேரளத்தில் நடந்தேறும் அகோரங்களும் தமிழக ஊடகங்களின் கள்ள மெளனமும்

பட்டினியை தாங்க முடியாமல் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை, இறந்த உடலை தகனம் செய்ய இடம் இல்லை: பிணராய் ஆளும் கேரளத்தில் நடந்தேறும் அகோரங்களும் தமிழக ஊடகங்களின் கள்ள மெளனமும்

By :

  |  18 Jun 2018 1:50 PM GMT

வீட்டைத் தவிர வேறு எந்த நிலமும் இல்லாததால், இறந்த சடலத்தை  சாலையோரத்தில் தகனம் செய்தனர் இறந்தவரின் உறவினர்கள். இந்த சம்பவம், பிணராய் விஜயன் ஆளும் கேரள மாநிலத்தில், செங்கன்னூர் நகராட்சி பகுதியில் நடந்தது.
செங்கனுர் பகுதியை சேர்ந்த குட்டியம்மாவிற்கு வயது 82. குட்டியம்மாவிற்கு புற்று நோய் இருப்பதை கண்டறிந்து அவரது மூத்த மகன் சசி, அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர்கள் வீட்டில், ஒரு கிணறு மற்றும் ஒரு குளியலறை உள்ளது. குட்டி அம்மாவின் மருமகள் ராஜமுமா மற்றும் பேத்தி இந்த வீட்டில் தங்கியிருக்கிறார்கள்.
செங்கன்னூர் நகராட்சியில் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, ஒரு பொது உடல் தகனம் செய்ய இடம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஒதுக்கப்படும் நிதி என்ன ஆகிறது என்று தெரியவில்லை. வேறு இடம் இல்லாமல் சாலை ஓரத்தில் குட்டியம்மாவின் உடலை தகனம் செய்துள்ளனர் உறவினர்கள்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தகனம் செய்ய பயன்படுத்தப் பட்ட நிலத்தை கண்டுபிடிக்க முனிசிபல் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆனால் அது ஒரு முறை கூட செயல்படுத்த படவில்லை.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கண்ணூர் மாவட்டம், பேரவூரில், பசியை தாங்கி கொள்ள முடியாமல் 15 வயதான 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
பசியால் தற்கொலை, உடலை தகனம் செய்ய இடமில்லை. இது தான் "பிண"ராய் ஆளும் கேரளத்தின் உண்மை முகமாக இருக்கிறது. நிலை இப்படி இருக்க, கேரளாவை என்னவோ சொர்க்க பூமி போல் உருவக படுத்துகின்றன தமிழக ஊடகங்கள். கேரளாவில் நடக்கும் நற்சம்பவங்களை மட்டும் வாய் கிழிய புகழும் தமிழக ஊடகங்கள், இது போன்ற செய்திகளை பதிவிடாமல் தவிர்ப்பது ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். மேலும், ஊடகங்கள் அனைத்தும் இடதுசாரி சிந்தனையாளர்களின் கையில் இருப்பதையே இது காட்டுகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் பத்திரிக்கை செய்திகளை வெளியிடும் ஊடகங்களை மக்கள் புறக்கணிப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
*The story is edited with factual updations.
Next Story