Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண்ணிடம் தனது போலி பெயரை கூறி, காதல் ஆசை காட்டி, ஏமாற்றி, கட்டாய மதமாற்றம் செய்த இளைஞன்: அதிகரிக்கும் லவ் ஜிகாத்

பெண்ணிடம் தனது போலி பெயரை கூறி, காதல் ஆசை காட்டி, ஏமாற்றி, கட்டாய மதமாற்றம் செய்த இளைஞன்: அதிகரிக்கும் லவ் ஜிகாத்

By :

  |  18 Jun 2018 2:20 AM GMT

உத்திர பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் கல்லூரி ஒன்றில் படித்து வந்த பெண்ணை, சப்ராஜ் ஹுசைன் என்ற இஸ்லாமிய இளைஞன், போலியான பெயரைக் கூறி, இந்துவை போல் நடித்து, காதல் ஆசை காட்டி, ஏமாற்றி, கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்து, தனது தம்பியை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளான்.
உத்தர பிரதேச மாநிலம் பிளாஸ்பூரை அடுத்த ராம்பூரைச் சேர்ந்த பெண், மொரதாபாத்தில் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு எதிரில் உள்ள ராஜ் ஷேர் மார்க்கெட்டிங் என்ற கடையில் பணிபுரிந்து வந்துள்ளார் அந்த இஸ்லாமிய இளைஞன். அந்த பெண்ணுடன் சில முறை பேச முயன்று இயலாததால், அந்த பெண் படிக்கும் ஆங்கில பயிர்சி வகுப்பில் இவரும் சேர்ந்துள்ளார். ராஜ் விஷ்ணோய் என்ற பெயருடன் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளான் அந்த இஸ்லாமிய இளைஞன்.
அந்த பெண்ணை நம்பவைக்க கோவிலுக்கு சென்று பூஜைகளையெல்லாம் செய்துள்ளான். பிறகு, காதல் ஆசை காட்டி அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அந்த பெண்ணை கர்பமாகியுள்ளான். பின்பு கோவிலுக்கு அழைத்து சென்று போலியாக ஒரு திருமணத்தையும் செய்துள்ளான்.
திருமணம் செய்துவிட்டு, அந்த பெண்ணை தனது சொந்த ஊரான ராம்பூருக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு சென்றுவிட்டான், அந்த இளைஞன். வெகு நாட்கள் ஆகியும் திரும்பி வராததால், அந்த பெண் தனது பெற்றோர்கள் இடத்தில் நடந்ததை தெரிவித்துள்ளார்.பிறகு அந்த இளைஞன் வரவழைக்கப்பட்டு இருவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
அந்த இளைஞனின் சகோதரர் ஒரு முறை தங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது, அவர்கள் இஸ்லாமியர் என்ற உண்மையை கண்டு பிடித்துள்ளார் அந்த பெண். இருந்தாலும் அந்த இளைஞனுடன் வாழ்ந்து வந்துள்ளார் அந்த பெண். பிறகு ஹுசைன் தனது சொந்த ஊருக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, கட்டாயமாக மதம் மாறும் படி வற்புறுத்தியுள்ளார். அந்த பெண் மதம் மாற சம்மதம் தெரிவிக்காததால், அந்த இளைஞனின் தம்பியும் மற்றவர்களும் அந்த பெண்ணை அடித்து சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பிறகு எப்படியோ அந்த பெண் தப்பித்து சொந்த ஊருக்கு திரும்பியவுடன், பெண்ணும் அவரது பெற்றோர்களும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மதம் மாற்றுவதற்காக காதல் என்ற பெயரில் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் லவ் ஜிகாத் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு ஏதேனும் சட்டம் இயற்றுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
Pic Credits - News Deeply
Next Story