Top
undefined
Begin typing your search above and press return to search.

முடிவுக்கு வந்தது ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க - மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி! ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க

முடிவுக்கு வந்தது ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க - மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி! ஆதரவை வாபஸ் பெற்றது பா.ஜ.க

By :

  |  19 Jun 2018 9:26 AM GMT

ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி நான்கு ஆண்டுகளாக அமைத்திருந்த கூட்டணி ஆட்சி இன்றோடு முறிந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
87 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், பா.ஜ.க 25 எம்.எல்.ஏ-க்களும், மக்கள் ஜனநாயக கட்சி 28 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுள்ளது. குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு தேவை 44 எம்.எல்.ஏ-க்களாகும்.
இந்த நிலையில், மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இந்த கூட்டணியின் மூளையாக செயல்பட்ட பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளரும், ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க பொறுப்பாளருமான ராம் மாதவ் இன்று மதியம் நிருபர்கள் மத்தியில் அறிவித்தார். பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பேச முடியாத சூழல் காஷ்மீரில் உருவாகிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றதற்கான கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் சமீபத்தில் ராணுவ வீரர் அவுரங்கசீப் கடத்தி கொல்லப்பட்டது, பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது, பத்திரிகையாளர் சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வுகளில் பா.ஜ.க-வுக்கும், மக்கள் ஜனநாயக கட்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என தெரிகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் ஆலோசனை நடத்திய சில மணி நேரங்களில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா இக்கூட்டணியை முறிக்க முடிவு செய்துள்ளார் என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
Pic Credits - DNA India
Next Story