Top
undefined
Begin typing your search above and press return to search.

பெருந்துறை​ பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள் - வழக்கம் போல் உண்மை தெரியாமல் மோடி மற்றும் பா.ஜ.க-வை பழிக்கும் இணைய போராளீகள்

பெருந்துறை​ பேருந்தில் ஹிந்தி எழுத்துக்கள் - வழக்கம் போல் உண்மை தெரியாமல் மோடி மற்றும் பா.ஜ.க-வை பழிக்கும் இணைய போராளீகள்

By :

  |  19 Jun 2018 3:32 AM GMT


​கவுந்தபாடியில் இருந்து பெருந்துறை சிப்காட் செல்லும் பேருந்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை எழுதப்பட்டு இருந்தது சமூக வலைதளங்களில் பெரிதான விவாத பொருள் ஆனது.



வட மாநிலங்களிலிருந்து 40,000 தொழிலாளர்கள் பெருந்துறைக்கு வந்து வேலை செய்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக பேருந்து நடத்துனர் சீனிவாசன், போக்குவரத்து கழகம் வழங்கிய பெயர் பலகையை வைக்காமல் ஹிந்தி எழுத்துக்கள் கொண்ட பலகையை அந்த பேருந்தில் வைத்துள்ளார். இந்த நடத்துனர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்த பகுதியில் உள்ளூர்வாசிகள் கூறுவதாவது  "பெருந்துறை சிப்காட் பேருந்து நிலையத்தில் மார்க்கெட் செல்லும் பேருந்துக்கு ஞாயிறு தோறும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. பெருந்துறை மார்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வார சந்தை நடத்தப்படுகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ளோர் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் கூடுவது வழக்கம். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து பெருந்துறை மார்க்கெட்டுக்கு செல்லும் 17-ஆம் எண் பேருந்தில் ஞாயிறு தோறும் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. பெருந்துறை சிப்காட் பகுதியானது முழுக்க முழுக்க வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது அதனால் ஹிந்தி பலகையும் இருப்பது அதிகாரிகளுக்கும் தெரியும்" என்கின்றனர்.


தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கூலி வேலை மற்றும் இதர வேலைகளுக்கு வடமாநிலத்தவர் தற்போது வேலை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த ஹிந்தி பெயர் பலகைக்கும் மோடி தான் காரணம் என போராளீகள் இணையத்தில் பொங்குவது தான் நகைப்பு.
Next Story