Top
undefined
Begin typing your search above and press return to search.

மதுரையில் 200 ஏக்கரில், 750 படுக்கை வசதி கொண்ட அதி நவீன AIIMS மருத்துவமனை: தமிழர்கள் நலன் காக்கும் மோடி அரசு

மதுரையில் 200 ஏக்கரில், 750 படுக்கை வசதி கொண்ட அதி நவீன AIIMS மருத்துவமனை: தமிழர்கள் நலன் காக்கும் மோடி அரசு

By :

  |  20 Jun 2018 8:41 AM GMT

மதுரையை அடுத்த தோப்பூரில், 200 ஏக்கர் நிலப்பரப்பில், 750 படுக்கைகள் கொண்ட அதி நவீன AIIMS மருத்துவமனை அமைக்கப் பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய மோடி அரசாங்கம், AIIMS மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய மோடி அரசு ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் AIIMS அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர், AIIMS மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த AIIMS மருத்துவமனை, மதுரை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. தமிழர்களுக்கு தொடர்ந்து நல திட்ட உதவிகளை வாரி வழங்கும் மோடி அரசு, மதுரை AIIMS மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது மேலும் சிறப்பு. முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதிலடம், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் இந்தியாவிலேயே முதலிடம், கோவை மாநகரம் உட்பட 12  ஸ்மார்ட் சிட்டிக்கள் தமிழகத்திற்கு அறிவிப்பு, தமிழகத்தில் ராணுவ தளவாடம், சேலம் விமான நிலையம் மீண்டும் இயக்கம், சென்னை - சேலம் பசுமை வழி சாலை, போன்று மோடி அரசின் தமிழக நலன்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் மக்களிடத்தில், தமிழக ஊடகங்கள், சரி வர கொண்டு சென்று சேர்த்துள்ளதா என்பது கேள்விக்குறி தான்.
Next Story