Top
undefined
Begin typing your search above and press return to search.

இறக்குமதி வரிகளை ஏற்றி அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடித்துள்ள பிரதமர் மோடி அரசு

இறக்குமதி வரிகளை ஏற்றி அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடித்துள்ள பிரதமர் மோடி அரசு

By :

  |  22 Jun 2018 2:19 AM GMT

அமெரிக்க டிரம்ப் அரசு பல நாடுகளிலிருந்து வரும் பல பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரித்து வர்த்தக யுத்தம் மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்கொள்ள இந்திய அரசு அமெரிக்காவிலிருந்து இங்கு இறக்குமதியாகும் பல பொருட்களின் இறக்குமதி விலையை அதிகரித்துள்ளது. இவ்வாறு செய்ததில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் வரிசையில் இந்தியாவும் இணைந்ததுள்ளது. இந்த இறக்குமதி வரி, சில பொருட்களுக்கு உடனடியாகவும், மற்ற பொருட்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியிலிருந்தும் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் கூறியது.
நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, கொண்டைக் கடலை மற்றும் மசூரி பருப்பு ஆகியவற்றின் இறக்குமதி வரியை 30 சதவீதத்திலிருந்து 70 சதவீதத்திற்கும் துவரம் பருப்பின் இறக்குமதி வரியை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாமின் இறக்குமதி வரியை ஒரு கிலோவிற்கு ₹100 லிருந்து ஒரு கிலோவிற்கு ₹120 என உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், வாதுமை கொட்டையின்(Walnut) இறக்குமதி வரியை 30 சதவீதத்திலிருந்து 120 சதவீதத்திற்கும் ஆப்பிள் பழத்தின் இறக்குமதி விலையை 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதத்திற்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், ரசாயன மற்றும் ஆட்டோ மொபைல் தொழில்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் இறக்குமதி வரியை இந்திய அரசு அதிகரித்துள்ளது.
இதே போல் இரும்பு மற்றும் எஃகு(Steel)வகைகளுக்கும் இறக்குமதி வரி ஏற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம்,  உலக வணிக அமைப்பில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் வகை பொருட்கள் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை மிக அதிகமாக ஏற்றியதால் புகார் தெரிவித்தது இந்திய அரசு. ஸ்டீல் அமைச்சராகத்தில் ஒரு அதிகாரி கூறியது இந்திய அரசின் இந்த செயல் அமெரிக்க அரசின் செயலுக்கு எதிர்ப்பு காட்டுவதற்காக என்று கூறினார். இவ்வாறு, இறக்குமதி வரியை ஏற்றி மோடி அரசு அமெரிக்க அரசு இறக்குமதி வரியை ஏற்றதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
Next Story