Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி பேச்சை தெய்வ வாக்காக எடுத்து, பகோடா கடை போட்டு சாதனை படைத்த தீவிர காங்கிரஸ்காரர்: சேற்றில் முளைத்த செந்தாமரை

பிரதமர் மோடி பேச்சை தெய்வ வாக்காக எடுத்து, பகோடா கடை போட்டு சாதனை படைத்த தீவிர காங்கிரஸ்காரர்: சேற்றில் முளைத்த செந்தாமரை

By :

  |  22 Jun 2018 2:04 AM GMT

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பகோடா விற்பது கவுரவமான சுய தொழில் எனவும், வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வியாபாரம் எனவும் கூறியிருந்தார். ஆனால், பிரதமர் கூறியதை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வந்தனர். தன் வினை தன்னை சுடும் என்பது போல, தீவிர காங்கிரஸ்காரர் ஒருவர், பிரதமர் கூறியதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு, பகோடா வியாபாரம் ஆரம்பித்து பெரும் வெற்றி பெற்று சாதித்து காட்டியுள்ளார்.
நாராயணபாய் ராஜ்புட், என்.எஸ்.யூ.ஐ(மாணவர் காங்கிரஸ்) உறுப்பினர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இவர், ஹிந்தி இலக்கியத்தில் பட்டதாரி பட்டம் பெற்றுள்ளார். மோடியின் நேர்காணலை கண்டு, அதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு, வதோதராவில் அவர் துவங்கிய ஸ்ரீராம் தால்வடா மையம் என்ற பக்கோடா கடை தற்போது பகோடா விற்பனை செயினாக உருவெடுத்து, இன்று 35 கிளைகளாக மாறியுள்ளது.
பிரதமர் மோடியின் நேர்காணலுக்குப் பிறகு இந்த யோசனை அவருக்கு வந்ததாக நாராயண பாய் கூறுகிறார். பகோடா விற்பனை செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ₹200 சம்பாதிப்பது, வேலையில்லாமல் இருப்பதைவிட சிறந்தது என்று கூறினார்.
"பகோடாவை விற்பனை செய்வது ஒரு வேலைவாய்ப்பு என்று பிரதமரின் ஆலோசனையின் பேரில், முயற்சி செய்து பார்த்தேன். முதலில் 10 கிலோ எடை கொண்ட பொருட்களை வைத்து பகோடா செய்ய ஆரம்பித்தேன். இப்பொழுது சுமார் 500 முதல் 600 கிலோ வரை பொருட்களை வைத்து நான் பகோடா செய்து விற்கிறேன்" என்று கூறினார்.
இருப்பினும், நாராயண்பாய் ராஜ்புட் கூறுகிறார், "நான் ஒரு தீவிரமான காங்கிரஸ் காரன், என்னுடைய அடுத்த பிறப்பிலும் அதே போல் இருக்க விரும்புகிறேன்."
பிரதமர் மோடியின் ஆலோசனையை "மிகவும் தீவிரமாக" எடுத்துக் கொள்ளும் காரணத்தை விளக்கி, "அவர் எனது நாட்டின் பிரதமராவார், ராகுல் காந்திக்கும் (காங்கிரஸ் தலைவர்) அவர் தான் பிரதமர்" என்றும் கூறினார்.
நாராயண்பாய் வதோதராவில் பகோடா விற்பனையின் வணிகத்தில் உடனடி வெற்றி பெற்றார்.  மேலும் இரண்டு மாத காலத்திற்குள் அவர் நகரம் முழுவதும் புகழ் பெற்றிருந்தார். தற்போது அவர் 100 கிராம் பாக்கோடாக்களை ₹10-க்கு விற்கிறார்.
காலை 7 மணி முதல் 11 மணி வரை நான்கு மணி நேரத்திற்குள் 300 கிலோ கிராம் பகோடாவை விற்கிறார். மாலையிலும் கிட்டத்தட்ட அதே அளவு விற்கிறார்.
பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு நடுவே, பிரதமர் பேச்சைக் கேட்டு உழைத்து முன்னேற விரும்பும் இது போன்ற காங்கிரஸ் கட்சியினரை பார்க்கும் போது, சேற்றில் முளைத்த செந்தாமரை என்றே கூற தோன்றுகிறது.
Next Story