Top
undefined
Begin typing your search above and press return to search.

சினிமா வாய்ப்பு இல்லாத போராளி இயக்குனர் பாரதிராஜா மீது பொதுமக்களிடம் வன்முறை தூண்டுவதற்கு முயன்றதாக தமிழக அரசு வழக்கு பதிவு

சினிமா வாய்ப்பு இல்லாத போராளி இயக்குனர் பாரதிராஜா மீது பொதுமக்களிடம் வன்முறை தூண்டுவதற்கு முயன்றதாக தமிழக அரசு வழக்கு பதிவு

By :

  |  23 Jun 2018 1:04 PM GMT

வன்முறையை தூண்டிவிடும் விதத்தில் பேசியதால் இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பாரதிராஜா, அமீர், கௌதமன் போன்ற திரைப்பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இயக்குனர்கள் பலர் வன்முறையை தூண்டும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பும், இயக்குனர் பாரதிராஜா சென்னை சூப்பர் கிங்ஸின் ஐ.பி.ல் போட்டியை எதிர்த்து போராடி பொது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையூறு அளித்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்ஸல்களை உண்டாகும் சூழலை தமிழக அரசு உருவாகி விடக்கூடாது என்று அரசை மிரட்டும் வகையில் கூறியுள்ளார்.
இதனால் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் பாரதிராஜா வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாரதிராஜா மீது ஹிந்து கடவுளை இழிவு படுத்தி பேசியதற்காகவும், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும்  வடபழனி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. அவர் பிள்ளையாரை இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசியதே அந்த வழக்குக்கு காரணம். மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசுவது அவர் உள்நோக்கத்துடன் பேசுகிறார் என்பதை தெளிவு படுத்துகிறது.
இயக்குனர் பாரதிராஜாவின் பேச்சு தமிழக அரசை மிரட்டுவது போல் இருப்பதாகவும் தேச விரோத கருத்துகளை தெரிவித்ததாகவும் அந்த மனுவில் உள்ளது.  சர்ச்சைக்குரிய பேச்சை பேசியதால் ஐ.பி.சி 153-ஆம் பிரிவிலும், பொதுமக்களிடம் வன்முறை மற்றும் பீதியை உண்டாக்கியதால் ஐ.பி.சி 505/1பி பிரிவிலும் இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story