Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் ஒரு அபாயத்தை கூட சந்திக்கவில்லை! மோடி அரசுக்கு ஜப்பான் நிதி நிறுவன ஆய்வில் புகழாரம்

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் ஒரு அபாயத்தை கூட சந்திக்கவில்லை! மோடி அரசுக்கு ஜப்பான் நிதி நிறுவன ஆய்வில் புகழாரம்

By :

  |  23 Jun 2018 12:55 PM GMT

நொமுரா என்னும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல நாடுகளின் பொருளாதாரத்தை குறித்து எச்சரிக்கை குறிகாட்டிகளை வெளியிட்டு வருகிறது.
தற்போதைய இந்த அறிக்கையின் படி இந்தியாவின் பொருளாதாரம் கடந்த மூன்று வருடத்தில் உள்நாட்டிலோ நிதி விவகாரத்திலோ ஒரு அபாயமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. ஆனால், சீனா, ஜப்பான், ஹாங் காங் போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் கடந்த மூன்று வருடங்களில் பல அபாய குறிகள் காணப்பட்டன என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் கடந்த மூன்று வருடங்களில் அபாயமில்லா பொருளாதார நாடாக உள்ளது.
இந்த அறிக்கையில் ஆசிய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு பல அபாயங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆசியாவில் அபாயமில்லா ஒரே நாடு இந்தியாவாக உள்ளது. ஆசியாவில் இந்தியாவை விட சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் கூட பல அபாயங்கள் உள்ளபோது, இந்தியாவில் அபாயம் இல்லாமல் இருப்பது இந்திய பொருளாதாரத்தின் மோடி அரசின் நிலையான நிர்வாகத்தை காட்டுகிறது.

காங்கிரஸ் அரசு 2004 முதல் 2014 வரை ஆட்சி செய்த பொழுது இந்திய பொருளாதாரத்தில் பல அபாய குறிகள் தென்பட்டது. ஆனால் 2014-இல் மோடி அரசு பதவியேற்றபின் இந்திய பொருளாதாரத்தில் அபாயம் தென்படாமல் இருப்பது இந்த அரசின் கீழ் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்பதை தெளிவப்படுத்துகிறது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற மிகப்பெரிய பொருளாதாரம் மாற்றம் நடந்தும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பது இந்த சீர்திருத்தங்களின் வெற்றிகளை காட்டுகிறது.
Next Story