Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள லஷ்கர் பயங்கரவாத அமைப்பு: திடுக்கிடும் உண்மைகள்!

காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள லஷ்கர் பயங்கரவாத அமைப்பு: திடுக்கிடும் உண்மைகள்!

By :

  |  23 Jun 2018 2:03 AM GMT

காஷ்மீரில் அமையுள்ள கவர்னர் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பொழுது, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களின் கருத்து தான் எங்களின் கருத்தும் என்று லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் முகமது ஷா ஈ-மெயிலில் தெரிவித்துள்ளார்.
அந்த ஈ மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "குலாம் நபி ஆசாத் மற்றும் மற்றவர்கள் கொண்டுள்ள அதே கருத்தைத்தான்  நாங்களும் கொண்டுள்ளோம். உள்கட்டமைப்பை நாசப்படுத்தவும், அப்பாவி மக்களை படுகொலை செய்யவும்,  வெகுஜனக் கொலைகள் இன்னும் தீவிரமடைவதற்கு, ஆளுனர் ஆட்சியை அமைப்பது மூலம் ஜக்மோகனின் சகாப்தத்தை இந்தியா திரும்பக் கொண்டு வருகிறது." ,என்று LeT தலைவர் முகமது ஷா கூறியதாக டாக்டர் அப்துல்லா காஸ்னவியின் மின்னஞ்சல் செய்தி தெரிவிக்கிறது.
காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள், அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று தெரிவித்த LeT யின் தலைவர் மேலும் கூறியுள்ளது :
"ஜம்மு காஷ்மீரில் 8 லட்சம் இந்திய வீரர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தியுள்ளனர். காஷ்மீர் மக்கள் அதிக அளவில் அடிமைகளாக அடித்து நொறுக்கப்பட்டனர். இதனால் போர் நிறுத்தம் வெறுமனே ஒரு நாடகம் தான், இது இரகசிய இலக்குகளை நோக்கியதே தவிர அமைதிகாக்கும் முன்னேற்றங்களுக்கு அல்ல. "
"நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சுதந்திரத்தைத் தகர்ப்பதில் இந்தியா தோல்வியுற்றுள்ளது. இந்தியா தனது சதித்திட்டங்கள் மற்றும் மோசமான தந்திரங்களினால் தோல்வி அடைந்து விட்டது. ஷுஜாத் புகாரியின் தியாகம் இந்தியப் படைகளின் கொடூரமான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய நாட்டிற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார், LeT அமைப்பின் தலைவர், இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் லஷ்கர் அமைப்பின் தலைவர், இந்தியாவை இவ்வளவு ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் மற்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Next Story