Top
undefined
Begin typing your search above and press return to search.

காஷ்மீரி பிரிவினவாத்தை தொடர்ந்து ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ்; கண்டுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி

காஷ்மீரி பிரிவினவாத்தை தொடர்ந்து ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ்; கண்டுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி

By :

  |  23 Jun 2018 3:53 PM GMT

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சைபுதீன் சோஸ் காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள் என்று முன்னதாக கூறிய கருத்தை ஆதரித்துளார். "முஷரப் காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்ப மாட்டார்கள் ஆனால் அவர்களுது முதல் நோக்கம் சுதந்திரம் என்று கூறியுள்ளார், முஷரப்பின் கருத்து இன்றும் உண்மையாக பொருந்தும்" என்று சைபுதீன் சோஸ் கூறியுள்ளார். இது இந்தியாவின் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும் சைபுதீன் சோஸ் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகள் காஷ்மீர் பிரிவினைவாத கும்பல்களின் கருத்துகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தன் கையில் ஆட்சி இருந்தால் காஷ்மீர் தீவிரவாதி புர்ஹான் வாணியை கொல்லாமல் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திருப்பேன் என்று ஒரு வருடத்திற்கு முன்பு கூறியுள்ளார். இதற்கு மேல், இந்தியா தான் காஷ்மீரில் நில விவரும் பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் பாகிஸ்தான் காரணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் பிராண்ட் சைபுதீன் சோசின் மகளை கடத்திய போது மத்திய அரசு தான் அந்த பெண்ணை காப்பாற்றியது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி சுட்டிக் காட்டியுளார். இந்தியாவில் இருக்கும் போது இந்திய அரசியலமைப்பில் இருக்கும் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இவ்வாறு பல சர்ச்சைக்குரிய தேசவிரோத கருத்துகளை கூறிவரும் சைபுதீன் மேல் காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிக ஆச்சிரியமாக உள்ளது.
Next Story