Top
undefined
Begin typing your search above and press return to search.

புனித ரமலான் பண்டிகையின் போது, இளம்பெண்ணை வரிசையில் நின்று கட்டி பிடித்த இஸ்லாமிய இளைஞர்கள்

புனித ரமலான் பண்டிகையின் போது, இளம்பெண்ணை வரிசையில் நின்று கட்டி பிடித்த இஸ்லாமிய இளைஞர்கள்

By :

  |  23 Jun 2018 1:10 PM GMT

உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே ரமலான் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் விமர்சியாக நடந்தன.  புனித ரமலான் கொண்டாட்டத்தின் போது, இளம்பெண் ஒருவர் இளைஞர்கள் சிலரை கட்டி பிடித்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு உள்ளார்.  இதனை கண்டு, ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள், அந்த இளம்பெண்ணை கட்டி பிடிக்க வரிசையில் நின்றுள்ளனர். இஸ்லாமிய சமூக மரபுகளின் படி பண்டிகை காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அடையாளம் தெரியாத ஆண்களை கட்டி பிடிப்பதற்கு அனுமதி இல்லை. இந்த நிலையில், யூ டியூபில் இளம்பெண் பதிவேற்றம் செய்த காணொளிக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
இதனை தொடர்ந்து தனது செயலுக்கு இளம்பெண் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதை பற்றி மாவட்ட இமாம் முகமது அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, "இளம்பெண்ணிடம் நான் பேசிய போது, அறியாமையால் அவர் இதுபோன்று செய்துள்ளார் என்று தெரிய வந்தது. இளைஞர்களை கட்டி பிடிப்பது இஸ்லாமிற்கு விரோதம் நிறைந்தது மற்றும் ஷரியத்திற்கு எதிரானது என எடுத்து கூறி புரிய வைத்தேன்" என்று கூறியுள்ளார்.
இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு மத்திய மோடி அரசும், உத்தர பிரதேச யோகி அரசும் பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.
Inputs from - Daily Thanthi
Next Story