Top
undefined
Begin typing your search above and press return to search.

மனதின் குரல்(மான் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஜிஎஸ்டியின் வெற்றியை அனைத்து மாநில அரசுகளுக்கும் சமர்ப்பித்தார், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானை பாராட்டினார்

மனதின் குரல்(மான் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஜிஎஸ்டியின் வெற்றியை அனைத்து மாநில அரசுகளுக்கும் சமர்ப்பித்தார், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானை பாராட்டினார்

By :

  |  25 Jun 2018 7:17 AM GMT

மான் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரக்கு மற்றும் சேவை வாரியான(GST ) பற்றி பேசினார். அப்பொழுது, அவர் ஜிஎஸ்டி வரி திட்டத்தை அமல்படுத்தி ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவுபடுத்தி, இதன் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். இந்த வெற்றிக்கு மாநில அரசுகளே காரணம் என்று கூறி இந்த வெற்றியை மாநில அரசுகளுக்கு சமர்ப்பணம் செய்தார். நாட்டின் நலனுக்காக அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து எடுத்த முடிவு என்று கூறினார்.
பிரச்சனைகளுக்கு வன்முறையால் தீர்வு காண முடியாது என்றும், சமாதானம், அஹிம்சாயால் மட்டுமே ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று கூறினார். "வரும் 2019-ஆம் வருடத்தில் ஜாலியன்வலாஹ் பாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெரும்,மொத்த மனித இனத்தையும் சங்கடப்பட செய்த சம்பவமாகும். யாரால் இந்த கொடுமையான சம்பவத்தை மறக்க முடியும்” என்று கூறினார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிக்கவேண்டும் என்று குரு நானக் மற்றும் கபீர் ஆகியோரின் போதனைகளை நினைவு படுத்தினார்.
இதை தவிர மிக சுவாரசியமாக கிரிக்கெட் விளையாட்டை பற்றி பேசினார். இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சரித்திர நிகழ்வு என்று கூறினார். ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை உலக கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய சொத்து என்று கூறி அவர் ஐ.பி.எல் போட்டியில் பந்து வீசிய விதத்தை பாராட்டினார். இந்திய அணி கோப்பையை பெறும் போது ஆப்கானிஸ்தான் வீரர்களையும் கூட அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வை பாராட்டினார்.
Next Story