Top
undefined
Begin typing your search above and press return to search.

நெற்றியில் திருநீறு பட்டையுடன், ரம்யமான தமிழ் அழகை தன் வசம் கொண்ட பிரகனாநந்தா: 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை

நெற்றியில் திருநீறு பட்டையுடன், ரம்யமான தமிழ் அழகை தன் வசம் கொண்ட பிரகனாநந்தா: 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை

By :

  |  25 Jun 2018 7:11 AM GMT

நெற்றியில் திருநீறு பட்டையுடன், ரம்யமாக, பார்க்கும் போதே தமிழ்நாட்டு சிறுவன் என்று கண்டு பிடிக்கும் அளவிற்கு அழகை தன் வசப் படுத்திக்கொண்ட பிரகனாநந்தா, செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பிரகனாநந்தா பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
இத்தாலியில் நடைபெற்று வரும் Gredine Open என்ற சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை தட்டிப் பரித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன், 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியது தான் சாதனையாக இருந்தது. இவருக்கு அடுத்தப்படியாக, இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பிரகனாநந்தா பெற்றுள்ளார்.
12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரகனாநந்தாவிற்கு உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story