Top
undefined
Begin typing your search above and press return to search.

இயக்கத்தை தகர்க்க உயிரை பறிக்கும் கொடூரம்; இந்து முன்னனியின் கோவை சசிகுமாரும் அவரின் படுகொலையும்

இயக்கத்தை தகர்க்க உயிரை பறிக்கும் கொடூரம்; இந்து முன்னனியின் கோவை சசிகுமாரும் அவரின் படுகொலையும்

By :

  |  25 Jun 2018 8:04 AM GMT

கோவையில் இந்து முன்னனியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார். துடிப்புமிக்க இளைஞர். இயக்கத்திற்காக தன்னையே அர்பணித்தவர், ஏன் உயிரையே தந்தவர் இவர். இவர் மறைந்து இரண்டாவது நினைவு நாளை நெருங்கி கொண்டிருக்கிறோம். அனைவராலும் பெருமையோடு நினைவு கூறப்படும் சசிகுமார், 4 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். இவர் விட்டு சென்ற இடம் இன்றளவும் நிரப்ப முடியாமல் வெறுமையில் நிறைந்து கிடக்கிறது. உன்னதமான ஓர் தொண்டரை இழந்த துயரத்தின் வடு இன்றும் அந்த இயக்கத்தை விட்டு அகலவில்லை.
இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் சங்கிலி தொடர் போல ஏராளமான நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தி வந்தார் சசிகுமார். அவருடைய உற்சாகமும், உத்வேகமும், இயக்கம் சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவருக்கு ஏராளமான நண்பர்களையும் அதே நேரத்தில் ஏராளமான எதிரிகளையும் சேர்த்தே கொடுத்திருந்தது.
அவருடைய கொலை வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையின் மூலம், துரோகம் சூழ்ந்த அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக எந்த வித பாதுகாப்புமின்றி திணிக்கப்பட்டிருக்கிறார், என்பது தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இயக்கத்தின் கொள்கையில் ஆழ்ந்து தொய்ந்து அதன் சித்தாந்தத்திற்காக பம்பரமாய் சுழன்று பணியாற்றி இன்னுயிரை துறந்த ஹிந்து முன்னனி தலைவர்கள் பட்டியலில் மூன்றாவதாக சசிகுமாரும் இணைந்து கொண்டது தான் பரிதாபம்!
கேள்விக்குறியென நிற்கும் வருங்காலத்தை மிரட்சியுடன் பார்க்கும் அவரின் மனைவி, வயதார்ந்த அவரின் தாய், நான்கு சகோதர சகோதரிகள் என அனைவரும் இவரின் இழப்பால் தனிமை பீடித்திருக்கிறார்கள். இவருடைய மறைவு தினத்தில் கட்சி தலைவர்களால் மலர் அஞ்சலி செலுத்தி இவரின் தியாகத்தை நினைவு கூர்ந்துள்ளனர்.
இவரின் கொடூரமான மரணத்தின் பேரதிர்ச்சியிலிருந்து மீளாத இவரின் குடும்பம். இது குறித்து கருத்து தெரிவித்த இந்து முன்னனி, “இயக்கத்தினர்களை நீடிக்கப்பட்ட குடும்பத்தினர்களாகவே கருதுகிறோம். அவர்களுக்கு எப்போதெல்லாம் உதவி தேவையோ அப்போதெல்லாம் எங்களால் இயன்றதை செய்கிறோம், அவர் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதன் மூலம் அவரின் இல்லாமை துயரை போக்க முயற்சிக்கிறோம்” என்றார்.
அவருடைய மரணத்திற்கு ஒரு மாதம் முன்பாகவே, தன்னை யாரோ பின் தொடர்வதையும், கண்கானிப்பதையும் உணர்ந்திருக்கிறார் சசிகுமார். இதற்காக காவல் துறையின் பாதுகாப்பையும் நாடியுள்ளார், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட சில வாரங்களில் அவர் கொல்லப்பட்டுள்ளார். களப்பணியாற்றி உயிரை தொலைத்த பல இயக்கத்தினரை போலவே இவருடைய வாழ்வும் தியாகத்தின் அடையாளமாய் மாறியது. ஆனால், இது குறித்து யாரும் கவலையுற்றதாய் தெரியவில்லை.
இதில் படு மோசமான அங்கமே, இந்த கொலைக்கான மையக்கருவை சிதைக்கும் விதமாக அவரின் மரணத்தை “தனிப்பட்ட பகைமை” அல்லது “தவறாக அடையாளம் காணப்பட்டு” நிகழ்ந்த கொலை என அற்ப காரணங்களை சொல்லி கொச்சைப்படுத்துவது தான். சசிகுமார் கலப்பு திருமணம் செய்தவர். அவருடைய மனைவியின் பெற்றோர் இவர்களின் திருமணத்தால் மனக்கசப்பில் இருந்துள்ளனர், என விளக்கினார் உறவினர் ஒருவர். ஆனால், எதிர்பாரா விதமாகவும், திட்டமிட்டும் நடத்தப்பட்ட இந்த கொலையை ஏதும் அறியா அப்பெண்ணின் குடும்பத்தின் மீது திசை திருப்ப சிலர் முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த குற்றத்தின் வேரை அறிந்து கொள்ளும் முனைப்புடன் இருந்தவர்களின் எண்ணங்களையெல்லாம் கிளர்ச்சியூட்டும் வகுப்புவாத சாயம் கொண்டு மழுங்கடிக்க முயற்சிப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது எனவும் அந்த உறவினர் தெரிவித்தார்.
சாதிக்கு எதிராகவும், வெற்று பேருக்காகவும் வெளியிடப்பட்ட மூர்கம் நிறைந்த முகநூல் பதிவு ஒன்றினால் இந்த கொலை “தவறாக அடையாளம் காணப்பட்டு” நிகழ்ந்திருக்கலாம் என்ற யூகத்திற்க்கு வழி வகுத்தது. இது குறித்து கருத்து தெரிவித்த உறவினர் ஒருவர், “ஒருவேளை ஆரம்ப காலங்களில் ஒரே மாதிரியான பெயர்கள் இருப்பதால் சில குழப்பங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எங்கள் சசி அண்ணா, அவர் செய்த செயல்களுக்காக மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்” என ஆணித்தரமாக தெரிவித்தார்.
1998-இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூலம் அச்சத்தின் கோரப்பிடியால் சரிந்திருந்தது கோவை. ஹிந்து அமைப்புகளின் கலாச்சார முயற்சிகள் அனைத்தும் கவிழ்க்கப்பட்டிருந்தன. அவ்வமைப்புகளின் நோக்கங்கள் அனைத்தும் தகர்த்தெறியப்படிருந்தன. அதன் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் வாயடைக்க செய்திருந்தது அச்சம்பவம் என ஹிந்து முன்னனியின் தற்போதைய செய்தி தொடர்பாளரும், கொல்லப்பட்ட சசிகுமாரின் சகோதரரும் ஆன தனபால் தெரிவித்தார்.
சசிகுமாரின் சீரிய முயற்சியாலும் கட்சியின் நடவடிக்கையாலும் 2001-ஆம் ஆண்டு முதல், இழந்த செழிப்புகள் அனைத்தும் மீண்டும் வந்து புத்துயிர் பெற்றன. மறக்கடிக்கப்பட்ட கோவில் சடங்குகள், சம்பிர்தாயங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் மீட்கப்பட்டன. அவர் செய்த ஆகச்சிறந்த சாதனையே உயிரற்று கிடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும், கொண்டாட்டத்திற்க்கும் புத்துயிர் ஊட்டியது தான். 2015-ஆம் ஆண்டில் 25 ஊர்வலங்களையும், கொல்லப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக 2016-ஆம் ஆண்டில் 36 ஊர்வலங்களை இந்து முன்னனி ஒருங்கிணைக்க பேருதவி புரிந்துள்ளார் சசிகுமார்.
[caption id="attachment_1564" align="alignnone" width="300"] விநாயகர் சதுர்த்தி பந்தலில் சசிகுமார்[/caption]
கோவில்களின் பிரபலமாக செய்யபடும் விளக்கு பூஜைகள் துவங்கி பல பண்பாட்டு கூறுகள் நிறைந்த கலாச்சார நிகழ்வுகளை நடத்தினார். மிகவும் மென்மையான சிந்தனைவாதி, அவரின் ஈர்ப்பு தன்மை கட்சியில் இருந்த பலரை நெகிழச்செய்தது.
ஆர்.எஸ்.எஸ்(ராஸ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) குடையின் கீழ் அங்கமாக இருக்கும் கட்சி இந்து முன்னனி. தமிழ்நாட்டை சார்ந்த மதரீதியான, கலாச்சார ரீதியான பண்பாடுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம். ஹிந்துத்துவத்தை பாதுகாப்பதும், மதக்குறியீடுகளை, அடையாளங்களை பாதுகாப்பதும் இவர்களின் கொள்கைகளுள் ஒன்று. இதில் ஆரம்பகாலத்தில் அனைத்து திசைகளுக்கும் மிதிவண்டியிலேயே பயணித்து ஒத்த சிந்தனையுள்ள பல அமைப்புகளை ஒன்று திரட்டி, ஏராளமான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர் சசிகுமார் என்றால் அது மிகையில்லை.
இயக்கம் மீண்டும் எழுச்சி கொண்டு வளர்ந்ததும், சசிகுமார் ஊடக நண்பர்களுடன் கொண்டிருந்த நல்லுறவும் சிலரை கவலையுற செய்திருக்கிறது. “பத்திரிக்கை நண்பர்களிடம் அபாரமான அணுகுமுறையை கொண்டிருந்தார். ஓர் செய்தி தொடர்பாளாராக தன்னுடைய பணியை பேரார்வத்துடன் செய்தார்” என சசிக்குமாரை நெருக்கமாக அறிந்திருந்த தமிழ் நாடு பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அவர்கள் தெரிவித்தார்.
இத்தனை விவேகம் கொண்ட இந்த இந்து முன்னனி நுணுக்கவாதி, ஆக்ரோஷமான மனிதரில்லை, அதிரப்பேசும் குரலுமில்லை, மார்புயர்த்தும் மற்ற தலைவர்களை போல அதிரடியானவரும் இல்லை. ஆனால் இவைகள் தான் அவரின் பலமே என சேகர் தெரிவித்தார். ஊடகங்களின் மூலம் பரந்து விரிந்த வெளிச்சத்தை பாய்ச்சி, இந்த அமைப்பை அடுத்த தளத்திற்க்கு எடுத்து செல்ல சசிகுமார் ஒரு கருவியாகவே செயல்பட்டார், இதன் மூலம் இயக்கத்திற்கும் அதன் செயல்பாடுகளுக்கு பல உதவிகள் கிடைத்தன.
“எப்போது சசிகுமார் கொல்லப்பட்டாரோ, அப்போது சிந்தனை மிகுந்த செயற்பாட்டளரை, அசாதாரணமான் தீர்கதரிசனம் கொண்டவரை இயக்கம் இழந்துவிட்டது” என தெரிவித்தார் சேகர், மேலும் வெகு விரைவாக வேகமெடுத்த இயக்கத்தின் அனைத்து முன்னெடுப்புகளையும், அதன் அஸ்திவாரத்தையும் அசைத்து பார்த்துவிட்டது அவரின் மரணம் என தெரிவித்தார்.
இந்து முன்னனிக்கான இடத்தை மீட்கும் போரட்டத்தில், மற்ற மதரீதியான அமைப்புகளின் கொடுங்கோல் செயல்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளக்கினார் சசிகுமார். சில அதிகாரிகளின் உதவியுடன் மிக முக்கியமான பொது இடங்களில் மதரீதியான முத்திரைகளை தாங்கிய கொடிகளை, கொடி கம்பங்களில் பறக்க விட்டார். சாய்பாபா காலனி முதல் கே.கே நகர் வரையும், டவுன்ஹால் முதல் போத்தனூர் வரையிலுமான பகுதிகளில் சிக்கல் நிறைந்த இடங்களிருந்தன. அங்கே வெளிப்படையாக வைக்கப்பட்டிருந்த மதரீதியான அடையாளங்களை இறுகப்பற்றும் கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் சாதிரீதியான கிளர்ச்சிகள் கட்டுப்படுத்த்ப்பட்டன, என சசிக்குமாரின் மற்றொரு சகோதரரும், பா.ஜ.க இளைஞரணியின் கோவை மாநகர் மாவட்ட தலைவருமான சுதாகரன் தெரிவித்தார்.
2016-ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக பசுவதை செய்யப்படுவதை அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் கவனத்திற்க்கு கொண்டு வந்தார் சசிகுமார். அவரின் சீரிய முயற்சியால், “வதைக்கு பொருந்தும்” என்ற அனுமதி சான்றிதழின்றி பசுக்களை ஏற்றி சென்ற வாகனங்கள் அதிகாரிகளின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு, பசுக்கள் அனைத்தும் கொட்டகைகளில் விடப்பட்டன. இந்த சான்றிதழ் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் வயதை அடிப்படியாக கொண்டு வழங்கப்படுவது. எனவே, இந்த சான்றிதழ் இன்றி சென்ற வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன, என்றும் “மனிதத்தன்மையுடன் கால்நடைகள் ஏற்றி செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகளை புறம்தள்ளிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக” சுதாகரன் தெரிவித்தார்.
[caption id="attachment_1565" align="alignnone" width="300"] மாட்டு கொட்டகையில் சசிகுமார்[/caption]
கோவை ரயில் நிலையத்திற்கும், டவுன்ஹாலுக்கும் உக்கடத்திற்கும் மத்தியில் அமைந்திருக்கும் மசூதி, சர்ச்சைக்கான மற்றொரு முக்கிய காரணி. கோட்டைமேடு பகுதியில் அமைந்திருக்கும் மசூதி அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டது. இது மதரீதியான செயல்பாட்டிற்காக கட்டப்பட்டது. ஆனால், இந்த ஆதாயத்தை வியாபாரிகள் தவறாக பயன்படுத்தி 50-க்கும் மேற்பட்ட கடைகளை இங்கே நிறுவியுள்ளனர். சட்டத்தை அலட்சியம் செய்யும் இவர்கள், சட்டத்திற்க்கு இணங்க வேண்டும் என அவர்களுக்கு எதிராக சசிகுமார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் என சுதாகரன் தெரிவித்தார்.
“அரசாங்கம் அவர்களுக்கான மாற்று இடத்தை கொடுத்தது. ஒன்றல்ல, இரண்டல்ல நான்கு இடத்தை கொடுத்தது. ஆனால் அவர்கள் காலி செய்ய மறுத்து விட்டனர். இவற்றுக்கு மாற்றாக கொடுத்த அந்த நான்கு இடங்களையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் ஆக்கிரமித்து விட்டனர்.” என்கிறார்.
துடியலூர் பகுதி, சுப்ரமணியம்பாளையத்தில், சக்கர விநாயகர் கோவிலின் அருகில் செப்டம்பர் 22, 2016-இல் பின்னிரவில் மிகக்கொடூரமாக சசிகுமார் கொல்லப்பட்ட போது அவருக்கு வயது 36. அவர் குடும்பத்தினரால் இரத்த வெள்ளத்தில் மிதந்த படி கண்டெடுக்கப்பட்டு பின் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. அவருடைய மரணத்தால் சாதிரீதியான கிளர்ச்சி வெடித்தது, சில வன்முறை சம்பவங்கள் பிராவகமெடுத்தன. இவற்றால் ஓரு சில நாட்கள் நகரம் ஸ்தம்பித்துபோனது. இவருடைய மரணத்திற்கு பல கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்க்கு ஒரு வாரத்திற்க்கு பின் குற்ற பிரிவு – சிஐடி சிறப்பு விசாரணை குழு இந்த வழக்கை கையிலெடுத்தது, இதன் பின் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர், இதில் இருவர் தற்போது பிணையத்தில் வெளியே வந்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், மத்திய அரசின் ஆணையின் பேரில் சசிகுமார் மரண வழக்கு தேசிய விசாரணை ஆணையத்திடம் ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
தேசிய விசாரணை ஆணையம் பதிந்திருக்கும் குற்றப்பத்திரிக்கையின் பக்கங்கள் 5000 தாண்டி செல்கிறது. என தனபால் தெரிவித்தார். மேலும் ஏப்ரல் மாதத்திலும், நடப்பு மாதத்திலும் இவ்வழக்கில் ஜாமீன் கோரிய இரண்டு குற்றம் சாட்டபட்டவர்களின் மனுக்கள், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடந்த வியாழன் அன்று தேசிய விசாரணை ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை ஒன்றை சையத் அபுதாகீர் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோருக்கு எதிராக, தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கும் பிரபல இந்தியா சாகீர் நாய்க்-கிற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறது.
சசிகுமார் குடும்பத்திற்கு டிவிட்டர் நிதியை திரட்டிய நண்பரும், பா.ஜ.க தமிழ்நாடு மாநில இளைஞரணி துணை தலைவருமான எஸ்.ஜி.சூர்யா கூறும் பொழுது “சசி அண்ணாவின் அஸ்தி பேரூர் நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட அத்தருணத்தில், இந்து அமைப்புகளின் மற்றொரு அத்தியாயம் ஏராளமான கேள்விகளை நம்முன் நிறுத்தி நீரில் கரைந்து போனது” என தெரிவித்தார்.
*This is a translated article from Swarajya Magazine.
Next Story