Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் உள்ள 30,000 சுயஉதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து 3,000 வன வள மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் உள்ள 30,000 சுயஉதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து 3,000 வன வள மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

By :

  |  26 Jun 2018 10:47 AM GMT

மத்திய பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் உள்ள 30,000 சுயஉதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து 3,000 வன வள மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2018 ஏப்ரல் 14 அன்று சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது, மாற்றத்திற்கான ஒரு புதிய முன்முயற்சியாக, மத்திய பழங்குடியினர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பான ட்ரைஃபெட்டின் வன வள திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பழங்குடியின மக்களின் வருமானத்தை அதிகரிப்பதில் மதிப்புக் கூட்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், வன வளம், மக்கள் வளம் மற்றும் பசு வள திட்டங்கள், பழங்குடியின- கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவை என்றார். இந்த 3 திட்டங்களின் நோக்கம் நிறைவேற, மாநில அரசுகளும் இவற்றை ஊக்குவிக்க வேண்டும்.
வன வள திட்டத்தின் கீழ், சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் தலா 30 பழங்குடியினரை உறுப்பினராக கொண்ட 10 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வனப் பகுதியில் சேகரிக்கப்படும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கான மூலதன உதவியும் வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் இந்த சுயஉதவிக் குழுக்கள், அவர்களது உற்பத்திப் பொருட்களை அவரவர் மாநிலத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்படும். ட்ரைஃபெட் அமைப்பி்ன் மூலம் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.
Next Story