Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் ஐந்து பாதிரியார்கள் ஒரு பெண்ணை பாலியல் இரையாக்கிய கொடுமை: வழக்கு பதிவு செய்யாத காவல்துறை

கேரளாவில் ஐந்து பாதிரியார்கள் ஒரு பெண்ணை பாலியல் இரையாக்கிய கொடுமை: வழக்கு பதிவு செய்யாத காவல்துறை

By :

  |  26 Jun 2018 2:29 AM GMT

கேரளாவில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரால் திருச்சபையில் அளிக்கப்பட்ட புகாரின் படி, அவரது மனைவி ஐந்து பாதிரியார்களுக்கு பாலியல் இரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி நியூஸ் மினிட் இணையதளத்திற்கு  அந்த புகாரை உறுதிப்படுத்திய, திருச்சபை செய்தித் தொடர்பாளர் PC எலியஸ் கூறியது, "ஐந்து பாதிரியார்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுத்து, அவர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்".
"பெண்ணின் கணவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களிடம் இருந்து வந்த புகார்கள்,  நிலுவையில் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என்று எங்களுக்குத் தெரியாது.  விசாரணையைத் தொடர்ந்த பின்னரே தான் அது உண்மையா போலியா என்று தெரியவரும். விசாரணையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
விசாரணைகள் முடிவடையும் வரை, பாதிரியார்கள் காலவரையற்ற இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனக் கண்டால், அவை மறுபரிசீலனை செய்யப்படும், என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.
ஐந்து பாதிரியார்களில், திருவல்லாவில் உள்ள நிரானம் மறைமாவட்டத்தில் இருந்து மூன்று பேரும், பந்தளதில் உள்ள தும்பாமனைச் சேர்ந்தவர் ஒருவரும், டெல்லியை சேர்ந்த ஒருவரும் அடக்கம்.
கடந்த சில நாட்களாக, அந்த பெண்ணின் கணவன் பேசும் ஒரு ஆடியோ கிளிப், சமூக வலைதளத்தில் பறவி வருகிறது. ஆடியோ கிளிப்பில் உள்ள பேச்சு பின்வருமாறு :
"அறிக்கையில் முதல் பில்லாக என் மனைவியின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் பில் இருந்தது. நான் அவளை விசாரித்த போது, தான் பாலியல் உறவு வைத்திருந்த ஒரு பாதிரியாரால் மிரட்டப்பட்டதாக கூறினாள். பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் திருமணத்திற்கும் முன்பாக, அவள் ஒரு பாதிரியாரிடம் உறவு வைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள். என் மகளின் ஞானஸ்நானத்தின் போது, என் மனைவி மனச்சோர்வு அடைந்தாள். இதனால் அவள், மற்றொரு பாதிரியாரிடம் நடந்ததை தெரிவித்தாள். அந்த பாதிரியார்,  நடந்ததை என்னிடம் கூறி விடுவேன் என மிரட்டி, அவளது பாலியல் ஆதரவைக் கோரியுள்ளார். அப்போது அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டு, அந்தப் புகைப்படங்களை மூன்றாவது பாதிரியாரிடம் பகிர்ந்து கொண்டார். அவரும் பின்னர், என் மனைவியைத் துஷ்பிரயோகம் செய்தார்."
பின்னர் ஐந்து வெவ்வேறு மறை மாவட்டங்களின் பெயரைக் குறிப்பிடுகிறார். மேலும் இதில் அதிகமான பாதிரியார்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறுகிறார், ஆனால், அவர்களின் அடையாளங்களை சரி பார்க்க முடியவில்லை. அவரது மனைவி, பாதிரியார்களுக்கு பயந்து கொண்டு, இதையெல்லாம் வெளியில் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.
"அதிகபட்ச தண்டனையாக அவர்கள் தற்காலிகமாக பணியில் இருந்து நிறுத்திவைக்கப் படுவார்கள் என்று எனக்குத் தெரியும். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். வேறு எந்த சர்ச்சும் அவர்களுக்கு இடம் அளிக்க கூடாது.", என்று ஆடியோவில் கூறுகிறார்.
எனினும், இது தொடர்பாக போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.
Picture & Input Credits - The NewsMinute
Next Story