Top
undefined
Begin typing your search above and press return to search.

பசுக்களை பராமரிப்பதால் சொந்த குடும்பத்தில் இருந்தே கொலை மிரட்டல்களை சந்தித்து வரும் இஸ்லாமிய பெண்

பசுக்களை பராமரிப்பதால் சொந்த குடும்பத்தில் இருந்தே கொலை மிரட்டல்களை சந்தித்து வரும் இஸ்லாமிய பெண்

By :

  |  26 Jun 2018 2:21 AM GMT

மத்திய பிரதேச மாநிலத்தில் மெஹ்ருன்னிஸா கான் என்னும் இஸ்லாமிய பெண் தனக்கு பிடித்த செயலான பசு மாட்டை பராமரிக்கும் செயலை செய்து வருகிறார். ஆனால், இதற்கு அவருக்கு பலர் மரண அசச்சுருத்தல்கள் விடுகின்றனர். இந்த மரண அச்சுறுத்தலை விடுபவர்கள் வெளியாட்கள் மட்டும் இல்லை, அந்த பெண்ணின் குடும்பத்திலிருந்தும் பலர் மரண அச்சுறுத்தல் விடுகிறார்கள் என்பது அதிர்ச்சியாகரமான தகவல். அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோர்கள் ஆகியோர் அசச்சுறுத்திகிறார்கள் என்பது தவிற, தனது பெற்றோர்கள் மற்றும் மகளும் கூட அவரின் ஆதரவிற்கு வரவில்லை என்பது தான் உச்சகட்ட கொடுமை.
“இந்த செயலை செய்ய தொண்டங்கிய நாள் முதல், வெளியாட்கள் மட்டுமல்ல, எனது சொந்த குடும்பத்தாரும் கூட எனக்கு மரணஅச்சுறுத்தல்களைத் தருகிறார்கள். அவர்களிடமிருந்து விலகி சென்ற போதும் கூட, நான் குடும்பத்திற்கு தவறான பெயர் கொண்டு வருகிறேன் என்று கூறி தொந்தரவு செய்கிறார்கள். பேசக்கூட தெரியாத விலங்குகளுக்கு நற்பணி செய்வது எப்படி குடும்பத்தின் பெயரை பாதிக்கும் என்று எனக்கு புரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
அவர் பசுக்களை பராமரிக்கும் இடம் தனது வீட்டிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நீமுச் என்னும் நகரத்தில் உள்ளது. அவரோடு இணைந்து வேலை செய்யும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மதன் ஓஜா என்பவர் பசுக்களை பாதுகாப்பதை மதவாத பிரச்னையாக பார்க்க கூடாது என்று கூறியுள்ளார். “எங்களின் செயல் வெறுப்பை பரப்ப நினைப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நாங்கள் ஒரு நற்பணி செய்வதால் எந்த விதமான மத வேறுபாடுகளை பார்ப்பதில்லை. மெஹ்ருன்னிஸா மேடம் எங்களோடு இணைந்துள்ளார். இந்த பசு பராமரிப்பு இடம் வளர்ந்து நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்" என்று மதன் ஓஜா கூறியுள்ளார்.
Next Story