Top
undefined
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் பணத்தில் இயங்கும் அலிகார் முஸ்லீம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஏன் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை? யோகி ஆதித்யனாத் சரமாரி கேள்வி!

மத்திய அரசின் பணத்தில் இயங்கும் அலிகார் முஸ்லீம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ஏன் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை? யோகி ஆதித்யனாத் சரமாரி கேள்வி!

By :

  |  27 Jun 2018 2:05 AM GMT

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலித் ஆர்வலர்களிடம் தலித் பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் கேட்குமாறு கூறினார். "பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தால் தலித் மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீட்டை தரும்போது, அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தால் என் இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
இதை தவிர தலித் பாகுபாடு விஷயம் சம்மந்தமாக கோஷங்களை எழுப்புவோர் அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவங்களிடம் இட ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் கூறினார். மேலும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களில் எந்த வித பாகுபாடும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் பாரதிய ஜனதா கட்சி பல சமயங்களில் குரல் கொடுத்துள்ளது. மத்திய அரசிடமிருந்து நிதி பெரும் அனைத்து பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் விதிமுறையை பின்பற்றி ஓபிசி,எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கடந்த பிப்ரவரி மாதம் கூறியுள்ளது. இந்த இரு பல்கலைக்கழகங்களும் மத்திய அரசிடமிருந்து நிதி பெரும் நிறுவனங்களாகும்.
மத்திய அரசு ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகர் இஸ்லாமிய பலக்லைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இட ஓதுக்கீட்டை கொண்டுவர அரசு முயற்சி செய்து வருகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் மத்திய சமூக நீதி அமைச்சரான தவர் சந்த் கெஹலோட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story