Top
undefined
Begin typing your search above and press return to search.

கடந்த இரண்டு வருடங்களில் ஐந்தரை கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ள மோடி அரசு!

கடந்த இரண்டு வருடங்களில் ஐந்தரை கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ள மோடி அரசு!

By :

  |  27 Jun 2018 1:09 PM GMT

சமீபத்தில் வெளிவந்த ஆய்வின் படி இந்தியா மிக வேகமாக தனது தேசத்தில் உள்ள வறுமையை குறைத்து வருகிறது. ஒரு நிமிடத்திற்கு 44 மக்கள் வறுமையை விட்டு வெளி வருகிறார்கள் என்றும் உலகத்திலே வறுமை வேகமாக குறையும் விகிதம் உள்ள ஒரு நாடு இந்தியா என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
இதனால், உலகத்திலேயே வறுமையுள்ள மக்கள் அதிகம் வாழும் நாடு என்ற பட்டியலை விட்டு இந்தியா வெளியேறியுள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு சென்றதால் நைஜீரியா நாடு அதிகமான வறுமை வாழும் மக்கள் இருக்கும் நாடாகியுள்ளது. 2018-ஆம் வருட இறுதியில் நைஜீரியாவில் 8.7 கோடி மக்கள் வறுமையில் இருப்பார்கள் என்றும், இந்தியாவில் 7.1 கோடி மக்கள் வறுமையில் இருப்பார்கள் என்றும், நைஜீரியா நாட்டில் வறுமை கூடிக்கொண்டே செல்கிறது என்றும், ஆனால் இந்தியாவில் குறைந்துக் கொண்டே செல்கிறது என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது. தற்போது குறையும் வேகத்தில் இந்தியா வறுமை குறியீட்டில் குறைந்தால், காங்கோ நாட்டை முன்னே தள்ளிவிட்டு வறுமையில் வாழும் மக்கள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு விரைவில் செல்லும் என்றும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
நரேந்திர மோடி அரசு வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கடந்த இரண்டு வருடத்தில் 12.5 கோடியிலிருந்து 7 கோடியாக குறைத்துள்ளது. நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மோடி அரசால் இப்படி ஒரு சாதனையை செய்திருக்க இயலாது. மோடி அரசு மக்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை என்னும் கட்டுக்கதைகள் அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்படுகிறது.
Next Story