Top
undefined
Begin typing your search above and press return to search.

சோளிங்கர் மலை பாதையில் உள்ள குரங்குகளுக்கு தினமும் பழம் அளித்து மகிழும் அர்ச்சகர்: அர்ச்சகரின் தலை மீது ஏறி விளையாடும் குரங்குகள்

சோளிங்கர் மலை பாதையில் உள்ள குரங்குகளுக்கு தினமும் பழம் அளித்து மகிழும் அர்ச்சகர்: அர்ச்சகரின் தலை மீது ஏறி விளையாடும் குரங்குகள்

By :

  |  27 Jun 2018 1:58 AM GMT

வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டத்தில் உள்ள, சோளிங்கர், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான யோகநரசிம்ம பெருமாள் கோவிலுக்குப் பெயர் பெற்றதாகும். பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு ஆற்காடு நவாபு மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலப் போக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி கோவில் என்றவுடன், நம் நினைவுக்கு வருவது அங்குள்ள குரங்குகள் தான். சோளிங்கர் கோவில் மலை பாதையில், நடந்து செல்லும் வழியில் ஏராளமான குரங்குகள் காணப்படும். முற்காலத்தில், ஏராளமான குரங்குகள் அந்த பகுதியில் இருக்கும் என்றும், தற்போது அதன் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கோவிலில் பகவான் சேவை புரியும் நல் உள்ளம் கொண்ட அர்ச்சகர் ஒருவர்,  கோவில் மலை பாதையில் உள்ள குரங்குகளுக்கு பழம் கொடுப்பதை  தினமும் செய்து கொண்டு வருகிறார். அர்ச்சகர் குரங்குகளுக்கு பழம் கொடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பறவி வருகிறது.
https://www.facebook.com/story.php?story_fbid=1686652491388350&id=100001308472707
அர்ச்சகரின் தலை மீதும், தோள் மீதும் ஏறி விளையாடும் குரங்குகள், அவரிடம் மிகவும் பிரியமாக பழகுகின்றன. அந்த காணொளியில் அர்ச்சகர் கூறுவதாவது, "மலை பாதையில், பழங்களோ, தீணிகளோ கிடையாது. அதனால், அங்கு வருபவர்கள் தருவதை பெற்றுக் கொள்கின்றன, குரங்குகள். அப்படி அங்கு வருபவர்கள் எதுவும் தரவில்லை என்றால், அவர்களிடம் இருந்து பிடுங்கி கொள்கின்றன. கோவிலுக்கு செல்லும் மலை வழி பாதையில், மொத்தம் நான்கு, ஐந்து ஷெட் இருக்கின்றன. ஒவ்வொரு ஷெட்டில் இருக்கும் குரங்குகளும் ஒரு அணியாக இருக்கும். ஒரு அணி மற்ற அணியுடன் சேராது. ஒவ்வொரு அணியில் உள்ள குரங்குகளுக்கும் பார்த்து பழம் கொடுக்க வேண்டும். ஒரு அணிக்கு பழங்கள் விடுபட்டாலும், அவை மற்ற குரங்குகளுடன் சண்டை இட்டுக் கொள்ளும்", என்று கூறுகிறார்.
குரங்குகளுக்கு செய்யும் கைங்கர்யத்தை, ஹனுமானுக்கு செய்யும் சேவையாக உணரும் அர்ச்சகர், "ஹனுமானுக்கு செய்யும் சேவையால், சகல சௌகர்யங்களும் உண்டாகும். கலி யுகத்தில் ஹனுமான் முக்கிய கடவுளாக விளங்குகிறார். எனவே, அவருக்கு புரியும் சேவையினால், சகல குடும்பத்திற்கும் க்ஷேமம் உண்டாகும். இன்றைய நிலையில், உலகெங்கும் காடுகள் அழிக்கப் படுகின்றன. புலிகள், யானைகள் மற்றும் பல உயிரினங்களின் எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. விலங்குகள் அழியாமல் இருக்க வேண்டும் என்றால், காடுகள் அழியாமல் இருக்க வேண்டும். இந்த சோளிங்கர் மலை பகுதிகளில், அதிகமாக குரங்குகள் இருந்து, தற்போது அழிந்து விட்டன. மீதம் இருக்க கூடிய குரங்குகளை, நிச்சயம் நாம் அனைவரும் காப்பாற்ற வேண்டும். நாம் அளிக்க கூடியதை சாப்பிட்டு விட்டு, அவைகள் திருப்தி அடைந்து கொள்ளும். இதை அறிவியல் பூர்வமாக அணுகினாலும் சரி, பக்தி மார்க்கமாக அணுகினாலும் சரி, எப்படி செய்தாலும் ஒரு நற் காரியத்திற்காக செய்தால், நிச்சயம் ஹனுமானின் அனுகிரஹம் பரி பூர்ணமாக கிடைக்கும். அனைவரும் இந்த நற் காரியத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.
இது போன்ற நல்ல உள்ளம் படைத்த பலரால் தான் இன்றளவும் நம் தர்மம் தழைத்தோங்குகிறது என்று கூறினால் மிகையாகாது. சோளிங்கர் மலை பகுதியில் உள்ள குரங்கு இனங்களை பாதுகாக்க தமிழக அரசோ அல்லது அற நிலையத்துறையோ ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Next Story