Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு

By :

  |  27 Jun 2018 1:53 AM GMT

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்(ஆர்.எஸ்.எஸ்.) விழாவில் பங்கேற்றதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா பதிவிட்டுள்ளது.
"கடந்த ஜூன் 7 ஆம் தேதி, நாக்பூரில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ அவர்கள், ஸ்வயம் சேவகர்களுக்கு இடையே உரையாற்றியதை தொடர்ந்து, விண்ணப்பங்களின் வரவு எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது", அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான விண்ணப்பங்கள், மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து தான் வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஜூன் 1 முதல் 6-ஆம் தேதி வரை, தினமும் 378 விண்ணப்பங்கள் கிடைத்தன. ஜூன் 7 அன்று, 1779 விண்ணப்பங்கள் கிடைத்தன. ஜூன் 7 - ற்கு பிறகு, நாள் ஒன்றிற்கு, 1200 - 1300 விண்ணப்பங்கள் வரை கிடைக்கிறது", என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரான, பிப்லாப் ராய் தெரிவித்தார். அதில், 40% விண்ணப்பங்கள் மேற்கு வங்கத்திலிருந்து வருவதாக தெரிவித்தார்.
எனினும், பிரணாப் முகர்ஜீ அவர்களின் வருகையால், ஆர்.எஸ்.எஸ்-ஐ ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கூற முடியாது என தெரிவித்த அவர், "தனது செயல்பாடுகளால், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றுள்ளது", என தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜீ அவர்களின் நற்பெயரையும் தாண்டி, விண்ணப்பங்கள் அதிகரிப்பிற்கு காரணமாக இருப்பது, ஆர்.எஸ்.எஸ் இயக்கித்தின் வலிமை தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 7-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சிக்ஷா வர்கில் உரையாற்ற, பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story