Top
undefined
Begin typing your search above and press return to search.

நெற்றியால் வெடித்த சர்ச்சை.. கிழிந்தது தி.மு.க-வின் முகமூடி..!!

நெற்றியால் வெடித்த சர்ச்சை.. கிழிந்தது தி.மு.க-வின் முகமூடி..!!

By :

  |  27 Jun 2018 1:16 PM GMT

தாய், சகோதரி, மைத்துனி, மனைவி, என்று எல்லோருமே மதம் கிடையாது, கடவுள் கிடையாது என்று பகுத்தறிவு பேசும் தி.மு.க சமீபகாலமாக ஒழுங்காக குங்குமம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குங்கும் வைத்துக் கொள்ளவில்லை, குங்குமம் இல்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிந்த விசயம் தான். அதன் கொள்கைகளை மறந்து மதம் போன்ற வழிபாடுகளில் கவனம் செலுத்துவது தற்சமயம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.
சென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் மே 12, 2016 அன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார். எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரனை ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்த போது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார். உடனே கும்பிட்டு, திரும்பி, நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டார். பின்பு போக போக குங்குமம் அழியும் வரை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே சென்றார்.
நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு. கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது, “என்ன நெற்றியில் ரத்தம் ஒழுகுகிறதா”, என்று தனக்கேயுரிய நக்கலுடன் கேட்டார். பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். ‘உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் எப்போதும் குங்குமத்துடன் தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ”அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!” என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. பயந்து போன அவர், குங்குமத்தை அழித்தே விட்டாராம்.
இப்படி பல இடங்களில் பலரின் மத நம்பிக்கைகளை புண்படுத்திவிட்டு, இன்றைக்கு கைதேர்ந்த ஆன்மீகவாதிகள் போல யாகம் செய்யும் அளவிற்கு அடிமட்டத்திற்கு இறங்கி வந்துள்ளது தி.மு.க. பெரியாரின் கொள்கைகளே எங்கள் உயிர் மூச்சு என்று கூறி வந்தாலும், அதெல்லாம் காற்றோடு போச்சு என்பதை இப்போது தான் அனைவரும் உணர துவங்கி உள்ளனர். சுரையை ஆழ அமுக்கினால் திமிறிக்கொண்டு மேலே எழும்பத்தான் செய்யும். அதுபோல என்னதான் அரசியல் ஆதாயத்திற்காக அடங்கி ஒடுங்கி வேஷம் போட்டாலும், சுயரூபம் வெளிப்பட்டே தீரும்.
Next Story