Top
undefined
Begin typing your search above and press return to search.

நெற்றியில் குங்குமம், கையில் கயிறு அணிந்து சென்றால், பள்ளியில் இருந்து நீக்கம் : கேரள அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் மதவெறி

நெற்றியில் குங்குமம், கையில் கயிறு அணிந்து சென்றால், பள்ளியில் இருந்து நீக்கம் : கேரள அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் மதவெறி

By :

  |  28 Jun 2018 12:19 PM GMT

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்கள் நெற்றியில் குங்குமம், கையில் கயிறு போன்ற மத குறியீடுகளை வைத்துக்கொண்டு வர கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளதாக Mirror Now ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
https://twitter.com/MirrorNow/status/1011857033958526977
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விடுத்த சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில், எந்த ஒரு மத குறியீட்டையும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள் கூறுகையில், "எங்கள் பிள்ளைகள், ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். அந்த சிறு மாணவர்களிடத்தில், தலைமை ஆசிரியர் எதற்காக மத வெறியை புகட்ட வேண்டும்? அதுவும் ஒரு அரசு பள்ளியில். மத அமைப்பு நடத்தும் தனியார் பள்ளி இல்லை இது. இது நாள் வரையில் மாணவர்களை, தலைமை ஆசிரியர் மிரட்டி வந்தார். ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியுட்டுள்ளார்.", என்று கூறியுள்ளனர்.
சமூக ஆர்வலர், ராகுல் ஈஸ்வர், Mirror Now -இடம் தெரிவிக்கையில், "அதிகார துஷ்ப்ரயயோகத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பள்ளி தலைமை ஆசிரியர், தனது சொந்த வகையான ஒரு ஒழுக்கத்தை திணிக்கிறார். மத பண்முகைத்தன்மை கொண்ட இந்திய நாட்டில், இது போன்ற செயல்கள், மாணவர்களின் வளர்ச்சிக்கு மிக பெரிய இடையூறாக இருக்கும். பத்திரிக்கையாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல், அவர்களின் கேள்விகளுக்கும் விடை அளிக்கவில்லை", என்று கூறினார்.
Next Story