Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரபல துப்பாக்கி சுடும் வீராங்கனையிடம் பொய் பெயரை கூறி திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய இளைஞன் - ஜார்கண்ட் 'லவ் ஜிகாத்'?

பிரபல துப்பாக்கி சுடும் வீராங்கனையிடம் பொய் பெயரை கூறி திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய இளைஞன் - ஜார்கண்ட் லவ் ஜிகாத்?

By :

  |  28 Jun 2018 7:10 AM GMT

தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பெயர் பெற்றவர், தாரா ஷாடியோ. இவரது கணவர், ஒரு இந்துவை போல் தன்னிடம் நடித்து, திருமணம் செய்து கொண்டு, பின்பு மதம் மாறும் படி வற்புறுத்தியதாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த "லவ் ஜிகாத்" சம்பவத்தை எதிர்த்து பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
2014-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ராஞ்சி காவல் நிலயத்தில் பதியப்பட்ட FIR-இன் படி, தாராவை மனம் முடிப்பதற்கு முன்பு, ராகிபுல் ஹசன் கான் என்பவர், ரஞ்சித் குமார் கோஹ்லி என்ற பெயரில் தாராவுடன் பழகியுள்ளார். திருமணமாகி ஒரு மாதத்திற்கு பிறகு இந்த FIR பதியப்பட்டுள்ளது.
அதன் பிறகு கான் கைது செய்யப்பட்டார். வழக்கு CBI கைக்கு மாறியது. பிறகு, 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாரா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (26 ஜூன்) அன்று, இருவரையும் விவாகரத்து செய்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி BK கவுதம் தீர்ப்பின் படி, தாரா மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஒருவரை மதம் மாறும் படி கட்டாயப் படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தாரா தனது புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு தான், அவர்கள் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பிறகு, அவர்கள் இஸ்லாமிய மத தலைவர் ஒருவரை வரவழைத்து, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தினர். இதற்கு தாரா ஒத்துழைக்காததால், அவரை வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தி உள்ளனர்", என்று தாராவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
எனினும், தாராவை துன்புறுத்தியதாக கூறும் வாதத்தை மறுத்த கான், தான் தாராவின் பெற்றோர்களுக்கு பண உதவி அளிக்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு எனவும் கூறினார். தான் பிறப்பால் ஒரு இந்து என்று கூறிய அவர், தான் ஒரு இஸ்லாமியர் என்பதையும் மறுக்கவில்லை.
Inputs & Pic Credits - Swarajya
Next Story