Top
undefined
Begin typing your search above and press return to search.

மகளிருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ​9​4-வது இடத்தில் இருக்கும் ​இந்தியாவை முதல் இடத்தில் இருப்பது போல் அபத்தமாக உருவகப்படுத்தி புழுகிய தாம்ஸன் ரியூட்டர்ஸ் ​அறக்கட்டளை - உண்மை என்ன?​

மகளிருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் ​9​4-வது இடத்தில் இருக்கும் ​இந்தியாவை முதல் இடத்தில் இருப்பது போல் அபத்தமாக உருவகப்படுத்தி புழுகிய தாம்ஸன் ரியூட்டர்ஸ் ​அறக்கட்டளை - உண்மை என்ன?​

By :

  |  28 Jun 2018 1:58 PM GMT

தாம்ஸன் ரியூட்டர்ஸ் நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான் தாம்ஸன் ரியூட்டர்ஸ் அறக்கட்டளை, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் எது, எங்கெல்லாம்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, தொந்தரவு மற்றும் தீங்கு விளைவிக்கும் கலாச்சார நடைமுறைகளை தவிர்க்க பட வேண்டும், சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் கல்விக்கான எளிமையான அணுகுமுறை எங்கெல்லாம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பனவற்றை மையப்படுத்தி உலகின் 19 நகரங்கள் (ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் மாபெரும் நகரங்கள்) பட்டியல் அந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர், மேனகா காந்தி இந்த கருத்துகணிப்பு முடிவுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கருத்து கணிப்பு “அகநிலை சார்ந்த முடிவுகள்” எனவும், ‘பாலியல் வன்முறைகள்’ மற்றும் ‘பாலியல் அல்லாத இதர வன்முறைகள்’, ஆள்கடத்தல் மற்றும் மற்ற சில விஷயங்களிலும் சமீப காலத்தில் இந்தியா பெறும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனவும் கூறிய இவர் வெளிவந்திருக்கும் இந்த கருத்துகணிப்பு முடிவுகள் “ஆச்சர்யத்தை தருவதாகவும் துல்லியமற்றதாகவும்​ இருப்பதாக” தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சுகன்யா சம்ருத்தி யோஜ்னா’, மற்றும் ‘ஜன் தன் யோஜ்னா’ போன்ற பல்வேறு சீரிய திட்டங்களின் மூலம் பெறப்படும் நிதியால் எவ்வாறு குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “2013-ஆம் ஆண்டு முதல் குறிப்பிடத்தக்க அளவிற்க்கு அதாவது  22% வரை  ‘தாய் இறப்பு விகிதம்’ குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சொல்ல தகும் வகையில் குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. 0-9 வயது வரையுள்ள குழந்தைகளின் திருமணம் அறவே தவிர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 15-19 வயது வரையுள்ள குழந்தைகள் தாயாக இருப்பதும் அல்லது கருவுற்றிருக்கும் விகிதம் 2005-06 இல் 16% ஆக இருந்தது தற்போது 2015-16 இல் 7.9% ஆக குறைந்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவின் படி மொத்தம் 38,947 பலாத்கார வழக்குகள் 2016-ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளன. இது 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் 36,735 மற்றும் 34,651 வழக்குகளாக இருந்தன. அறிக்கையில் அதிகரித்ததாக காட்டப்படும் இந்த எண்ணிக்கை நமக்கு உணர்த்துவது ஒன்றை தான் தங்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களை குறித்த புகார்களை தெரிவிக்கும் சாதகமான சூ​ழல் பெண்களுக்கு அதிகரித்துள்ளது, இப்போது அவர்களால் காவல்துறையை எளிமையாக அணுக முடிகிறது.
நிகழும் பாலியல் சம்பவங்களை கணக்கிட்டு பார்த்தால், 1000 மக்கள் தொகை கொண்டயிடத்தில் 0.03 பேர் இந்தியாவில் பாதிக்கப்படுவதாகவும், இதுவே அமெரிக்காவில் 1000 மக்கள் தொகை கொண்டயிடத்தில் 1.2 பேர் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. “ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் தற்செயலாக மட்டுமே இங்கே நடப்பதாகவும், பெண்கள் மீது கல்வீச்சு, பெண் பிறப்புறுப்பு சிதைவு போன்ற கொடூரமான வன்முறைகள் இங்கே இல்லை என்றும். எனவே உலகத்தில் வன்முறை நிகழும் நாடுகளின் பட்டியலில் மிக நிச்சயமாக இந்தியா இருப்பதற்கான சாத்தியங்களே இல்லை" என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ரியூட்டர்ஸ் நடத்திய ஆய்விற்காக, பல்வேறு துறையை சார்ந்த இருபது நிபுணர்கள் ஒவ்வொறு நகரத்திலும் தொடர்புகொள்ளப்பட்டார்கள். இந்த நிபுணர் குழு பல்வேறு நகரங்களில் இருக்கும் பெண்களின் சார்பாக ஓர் முடிவை வகுத்தனர் “இந்திய நாடு, பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது”, என்பது அவர்களின் முடிவு. இதில் சுவாரஸ்யகரமாக அந்த நிபுணர்களின் பெயர், பதவி, சான்றுகள், நிபுணத்துவம் அல்லது தகுதி என எந்த தகவலையும் பொதுமக்களின் பார்வைக்கு அவர்கள் வைக்கவில்லை. எனவே அதன் நம்பிக்கத்தனமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுகிறது.​

அந்த அறக்கட்டளையின் அறிக்கை படி, உலகின் மாபெரும் 19 நகரங்களின் விதியை வகுக்க மிகச்சிறிய எண்ணிக்கையிலான 380 நிபுணர்களே இந்த கருத்துகணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உலகின் மொத்த மக்கள் தொகை 7​60 கோடியை​ தாண்டி கொண்டிருக்கும் வேளையில், ​​அதில் இந்தியா 17.74% பங்கு வகிக்கும் சூழலில் இந்த மாதிரி அளவுகோல் மூலம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு​ எந்த வகையில் இந்தியாவிற்க்கு நியாயம் சேர்க்கும்?


இந்த கருத்துகணிப்பு 2011-ஆம் ஆண்டின் மறுபதிப்பு மட்டுமே. ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகளென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட கருத்துகணிப்பு இந்தியர்களால்​ வரவேற்கபடவில்லை. மாறாக, பெரும்பாலானவர்கள் இதன் கருத்துகணிப்புக்கான அடிப்படை குறித்த கேள்விகளை எழுப்பி அதை பெரும் சாவலாக மாற்றி வருகின்றனர்.
இந்தியாவை பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு என வரையறை செய்த நிபுணர்குழு குறித்த சந்தேகங்களை டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எழுப்பி மக்கள் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அவர்கள் இது இந்தியர்களை இழிவுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயல் என கடுமையாக சாடியுள்ளனர்.
தாம்ஸன் ரியூட்டர்ஸ் அறக்கட்டளை நடத்தியது வெறும் கருத்துகணிப்பு மட்டுமே, இது புள்ளியியல் தரவு அல்ல. புள்ளியியல் தரவின் படி சர்வதேச அளவில் 2014-ஆம் ஆண்டில் கிட்டத்த 2​5 லட்சம்​ பாலியல் வன்முறை வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  ஐக்கிய நாடுகளின் போதை மற்றும் குற்றங்கள் அலுவலகத்தின் அறிக்கையின் படி 1,00,000 மக்களில் 100-க்கும் மேற்பட்ட பலாத்காரங்கள் அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல நாடுகளில் நடப்பதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐ.நா-வில் தெரிவிக்கப்பட்டுள்ள 77 நாடுகளில் சுவீடன், யுனைட்டட் கிங்டம், போட்ஸ்வானா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தான் அதிக விகிதத்திலான பாலியல் வன்முறைகள் நிகழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொன்னால் அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. புள்ளியியல் தரவுகளின் படி 100,000 குடிமக்களுக்கு நிகராக நடைபெறும் பலாத்கார சம்பவங்களில் பல்வேறு நாடுகளுக்கு இடையே இந்தியா வகிக்கும் இடம் 94.
இந்த கருத்துகணிப்பில், நாளுக்கு நாள் பெருகிவரும் மிககொடூர செயலான பிறப்புறுப்பு சிதைவு, பலதாரங்களை மணத்தல், பாலியல் அடிமைத்தனம் மற்றும் ஆதிக்கம் போன்றவைகள் தலைதூக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவை உயர்த்தியிருப்பது ஆச்சர்யமடையவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறது. 2016-ஆம் ஆண்டில் ஐ.நா குழந்தைகள் நிதி நடத்திய கருத்துகணிப்பின் படி எகிப்தில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 85% பேர்  பிறப்புறுப்பு சிதைவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பேற்பட்ட இந்த எகிப்து கூட இந்தியாவை விட பாதுகாப்பான இடமாக இந்த கருத்துகணிப்பால் அறிவிக்கப்பட்டிருப்பது விந்தையானதே.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை மறுப்பதற்கு இல்லை என்றாலும், இங்கே ஒவ்வொறு பெண்களும் ஏதோவொரு ரூபத்தில்  சிறு அளவிலான துன்புறுத்துலையாவது அனுபவித்திருப்பார்கள் என்ற போதும், இந்த ஆ​​ய்வறிக்கை தெரிவிக்கும் இந்தியாவின் இடம் என்பது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நியாயத்திலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்​கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.
With Inputs from OpIndia.
The article is Co-authored by Mr.G.Pradeep.
Next Story