Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவைக்கு அடுத்த பரிசை அளித்த பிரதமர் மோடி: பம்ப், வால்வு மையமாக கோவை தேர்வு

கோவைக்கு அடுத்த பரிசை அளித்த பிரதமர் மோடி: பம்ப், வால்வு மையமாக கோவை தேர்வு

By :

  |  29 Jun 2018 6:00 AM GMT

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஏதுவாக, பம்ப் மற்றும் வால்வு மையமாக கோவையை, மத்திய அரசு தேர்தெடுத்துள்ளதாக, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின்(சீமா) புதிய தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ஏதுவாக, பம்ப் மற்றும் வால்வு மையமாக கோவையை, மத்திய அரசு தேர்தெடுத்துள்ளது. அதன் விளைவாக, கோவையில் பம்ப் மற்றும் வால்வுகளுக்கு, கிளஸ்டர்கள் மற்றும் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. பம்ப்களுக்கான 'சென்டர் ஆப் எக்சலென்ஸ்' அமைக்கும் திட்டத்தை, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் கையில் எடுத்திருக்கிறது. அதில் ஒரு கட்டமாக, வால்வுகளுக்கான கிளஸ்டர் விரைவில் கோவையில் அமைய இருக்கிறது.
கோவையில் தயாராகும் பம்ப்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகளவில் வாங்கி, அவர்கள் பிராண்டுகள் வாயிலாக விற்பனை செய்கின்றன. சீமாவின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கிருஷ்ணகுமார் பேசியதாவது "நாமும் சொந்த பிராண்டுகளை அதிகமாக உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். சூரிய மின்சக்தியை அரசு ஊக்குவித்து வருகிறது. எனவே சோலார் பம்ப் செட்டுகளை உருவாக்குவதிலும், நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்."
Courtesy - Dinamalar
Next Story