Top
undefined
Begin typing your search above and press return to search.

பெண் பிள்ளைகள், பூ பொட்டுடன் பள்ளிக்கு வர கூடாது : நாகர்கோவில் கிறிஸ்துவ தலைமை ஆசிரியரின் மதவெறி

பெண் பிள்ளைகள், பூ பொட்டுடன் பள்ளிக்கு வர கூடாது : நாகர்கோவில் கிறிஸ்துவ தலைமை ஆசிரியரின் மதவெறி

By :

  |  30 Jun 2018 7:14 AM GMT

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், பெண் பிள்ளைகள் பூ, பொட்டுடன் பள்ளிக்கு வர கூடாது என உதரவிட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என தந்தி தொலைக்காட்சியின் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகே அமைந்துள்ள பள்ளிக்கூடம் வெளியில் பெற்றோர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து போலீசார் அங்கு சென்றனர். பெற்றோர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அன்று (ஜூன் 22) பள்ளியின் தலைமை ஆசிரியர் ரானிபாய், மாணவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில், மாணவர்கள், பொட்டு, மலர்கள், கையில் புனித கயிறு ஆகியவை அணிந்து கொள்ளக்கூடாது என்று அறிவித்தார்.




பிறகு, தலைமை ஆசிரியர், எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் செயல்படமாட்டார் என்று பெற்றோருக்கு, போலீசார் உத்தரவாதம் அளித்தனர். இந்த விஷயத்தில் போலீசார் விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று செவ்வாயன்று (ஜூன் 26) விசாரணை நடத்தினர்.




கேரளாவில் இதே போல் நடந்த ஒரு சம்பவத்தின் சர்ச்சை ஓய்வதற்குள்ளாக தமிழகத்தில் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்கள் நெற்றியில் குங்குமம், கையில் கயிறு போன்ற மத குறியீடுகளை வைத்துக்கொண்டு வர கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை விடுத்தார்.




ஆனால், நாகர்கோவிலிலோ, பெண் பிள்ளைகள் பூ, பொட்டுடன் பள்ளிக்கு வர கூடாது என உதரவிட்டுள்ளர் தலைமை ஆசிரியர்.




கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படுகின்ற பள்ளிகளில் இத்தகைய சம்பவங்கள் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தகைய கட்டளைகளை வெளியிடுகின்ற கிறிஸ்தவ தலைமை ஆசிரியர்களின் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது.



Based on Inputs from Swarajya.

Next Story