Top
undefined
Begin typing your search above and press return to search.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மூளைச்சலவை செய்து, மீனவ மக்களின் உணர்வுகளைத் தூண்டியது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் : மீனவ மக்கள் பகீர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மூளைச்சலவை செய்து, மீனவ மக்களின் உணர்வுகளைத் தூண்டியது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் : மீனவ மக்கள் பகீர்

By :

  |  30 Jun 2018 7:06 AM GMT

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம், தூத்துக்குடி மீனவ மக்கள் வெள்ளிக்கிழமை அன்று மனு அளித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீனவ மக்களின் உணர்வுகளைத் தூண்டியது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தான் எனப் புகார் கூறியுள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் அனைத்து மீனவ அமைப்புகள் சார்பில், ஊர் தலைவர் ராபர்ட்,  நவீன சங்கு குளி தொழிலாளர் சங்க நிர்வாகி முகமது மைதீன்,  அண்ணா சங்கு குளித்தல் சங்க நிர்வாகி இசக்கிமுத்து, வழக்கறிஞர் ரீகன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான சார்பு நீதிபதி, சாமுவேல் பெஞ்சமினிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையால் நேரடியான பாதிப்படைந்த குமரெட்டியாபுரம் மக்களால் பிப்.12 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மார்ச் 24 ஆம் தேதி உயர்நீதிமன்ற அனுமதியோடு தூத்துக்குடி மக்களால் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது. மக்கள் அதிகாரம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரிராகவன், வாஞ்சிநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத் தரும் வழக்கறிஞர்களாக செயல்பட்
டனர். அதன் பிறகு கிராமங்களில் ஊடுருவிய வழக்கறிஞர்கள், ஏப். 23 ஆம் தேதி மக்களைத் திரட்டி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்குச் சென்று மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

மேலும், கிராமங்களில் பரப்புரை செய்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர். பின்னர்,  இளைஞர்களை மூளைச்சலவை செய்து , மே 22ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கோயில் பகுதி, பாத்திமா நகர் பகுதி, புதுத்தெரு,  குரூஸ்புரம்,  திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தனர்.


மே 20ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மீனவ அமைப்பின் தலைவர்களை அழைத்துப் பேசிய கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கத்தில் எஸ்ஏவி மைதானத்தில் அரசு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது, வணிகர்கள் மற்றும் இதர தொழில் அமைப்புகளோடு இணைந்து நாங்களும் செயல்படுவோம் என்று உறுதியளித்து அதன்படியே நடந்து கொண்டோம். ஆனால், போராட்ட களங்களில் நேரடியாக, பெண்கள் மற்றும் இளைஞர்கள் மனதிலும் எதிர்மறையான கருத்துகளை வழக்கறிஞர் ஹரிராகவன் உள்ளிட்டோர் பரப்பி,  அவர்களது உணர்வுகளைத் தூண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதே நம்முடைய ஒரே நோக்கம் என்று முழக்கமிட்டனர்.


காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் என பெண்களை வைத்து வீரவசனம் பேசவிட்டு வேடிக்கை பார்த்தனர் என்பதற்கு பல விடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளன.ஏப்ரல் மாதம் நடத்தியதைப் போல மே 22 ஆம் தேதியும் வழி நடத்திச் செல்வார்கள் என்று நம்பியே, மீனவப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.


ஆனால், ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்படும் வரை பொதுமக்களோடு இருந்த அவர்கள், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், அதன் பிறகும் எங்கே இருந்தார்கள் என தெரியவில்லை.தற்போது வழக்கறிஞர்கள் இருவரும் தங்களை காத்துக் கொள்வதற்காக, மீனவ அமைப்புகளே மே 22 ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன என்றும், தங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்னெடுத்து வருவதாக அறிகிறோம்.


அத்துடன் காவல்துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறோம். எனவே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு எங்களுக்கு சட்ட உதவிகள் செய்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


144 தடை உத்தரவையும் மீறி, அப்பாவி மக்களை போராட்டத்திற்கு தூண்டி, பொய் பரப்புரைகளை கூறி, மக்களை தவறான வழியில் நடத்தியுள்ள அமைப்புகளை அரசு தடை செய்யுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


Based on Inputs from Dinamani

Next Story