Top
undefined
Begin typing your search above and press return to search.

கருவறுக்கப்படும் கறுப்புப்பணம்.. ஸ்தம்பிக்க இருக்கும் மும்பை பங்குசந்தை..!!

கருவறுக்கப்படும் கறுப்புப்பணம்.. ஸ்தம்பிக்க இருக்கும் மும்பை பங்குசந்தை..!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  3 July 2018 5:17 PM GMT

மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்கள் நாளை (புதன்கிழமை) நீக்கப்பட உள்ளன.
கருப்பு பணத்தை ஒழிக்கும் விதத்தில் எந்த வித வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து 333 போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்குசந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி வர்த்தகம் நடைபெறாத, சந்தேகத்திற்குரிய விதத்தில் செயல்பட்ட 200 நிறுவனங்கள் கடந்த மே மாதம் மும்பை பங்குசந்தையில் இருந்து நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேலும் 222 நிறுவனங்கள் நாளை முதல் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்­டுக­ளாக செயல்­ப­டாது, பெய­ர­ள­வில் உள்ள, 3-4 லட்சம் நிறு­வ­னங்­க­ளின் பதிவை ரத்து செய்­வது குறித்து, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை அமைச்­ச­கம் பரி­சீ­லித்து வருகிறது. பலர், பெயர­ள­வில் நிறு­வ­னங்­களை பதிவு செய்து, அவற்­றின் மூலம், சட்ட விரோத பணப் பரி­மாற்­றம், வரி ஏய்ப்பு உள்­ளிட்­ட­வற்­றில் ஈடுபட்டு வரு­கின்­ற­னர்.இத்­த­கைய போலி நிறு­வ­னங்­களை களையெ­டுக்க, மத்­திய அரசு, சிறப்பு குழுவை அமைத்­து உள்­ளது.
இக்­குழு, 16 ஆயி­ரம் நிறு­வ­னங்­கள் போலி­யா­னவை என, அடையாளம் கண்­டுள்­ளது; 80 ஆயி­ரம் நிறு­வ­னங்­களை, சந்­தேக பட்டி­யலில் சேர்த்­துள்­ளது. இத்­து­டன், பொது இயக்­கு­னர்­க­ளைக் கொண்ட, 17 ஆயி­ரம் போலி நிறு­வ­னங்­களை கண்­டு­பி­டித்­துள்ளது. இந்­நி­லை­யில், நிறு­வ­னச்சட்­டப்­படி, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக, நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யா­ம­லும், எவ்­வி­த­மான வர்த்­த­கம் புரி­யா­ம­லும் உள்ள நிறு­வ­னங்­க­ளின் பதிவை ரத்து செய்வது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது.
கடந்த, 2017 டிசம்­பர் நில­வ­ரப்­படி, 17 லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறுவ­னங்­கள், மத்­திய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்­றில், 11.40 லட்­சம் நிறு­வ­னங்­கள், செயல்­பாட்­டில் உள்­ளன. அவற்­றில், இரண்டு அல்­லது அதற்கு மேற்பட்ட ஆண்­டு­கள் செயல்­ப­டாத நிறு­வ­னங்­களும் அடங்­கி ­உள்­ளன.
இந்­நி­லை­யில், குறைந்­த­பட்­சம் இரண்டு ஆண்­டு­க­ளாக வர்த்­த­கம் புரியா­மல், நிதி நிலை அறிக்கை தாக்­கல் செய்­யா­மல் உள்ள, 25-30 சத­வீத நிறு­வ­னங்­கள் களை­யெ­டுக்­கப்­படும் என, தெரி­கிறது. அவை, மத்­திய நிறு­வ­னங்­கள் பதி­வா­ளர் அலு­வ­லக பதிவு பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­ப­ட­லாம். இந்த வகை­யில், 3 -4 லட்­சம் போலி நிறுவனங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­படும் என,
எதிர்­பார்க்கப்படுகிறது. ஏற்க­னவே, இது­போன்ற கார­ணங்­க­ளுக்­காக, 2.25 லட்­சம் போலி நிறு­வ­னங்­க­ளின் பதிவு நீக்­கப்­பட்­டுள்­ளது.
Next Story