Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசு திட்டத்தை நிறைவேற்றினால் 16 பேரின் கைகளை வெட்டுவேன் என்கிற ரீதியில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது

அரசு திட்டத்தை நிறைவேற்றினால் 16 பேரின் கைகளை வெட்டுவேன் என்கிற ரீதியில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 July 2018 6:26 AM GMT

மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் நலத்திட்ட உதவிகளுக்கு எதிராக, அடிப்படை ஆதாரங்கள் இல்லாத தவறான கருத்துகளை பரப்பும் செயலை பலரும் செய்து வருகின்றனர். இதில் சமூக ஆர்வளர்கள், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் நடமாடுபவர்களும் அடக்கம். அந்த வகையில், அரசு திட்டத்துக்கு எதிராக அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தவறான கருத்துகளை பரப்பியதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என பாலிமர் செய்திகள், செய்தி வெளியிட்டுள்ளது.
அரசின் திட்டங்களுக்கு எதிராக உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட்டார் எனவும்,  சமூக வலைதளங்கள் மூலமாக தவறான தகவல்களை பரப்பியுள்ளார் எனவும் வசீகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திட்டத்தை நிறைவேற்றினால், 16 பேரின் கைகளை வெட்டுவேன் என்கிற ரீதியில் வசீகரன் பேசியதாகவும் கூறப்படுகிறது.  இதனை அடுத்து கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ், வசீகரன் மீது வழக்குப் பதிவு செய்த சேலம் காரியாப்பட்டி போலீசார், இன்று காலை சென்னை மதுரவாயல் சீனிவாசா நகரில் உள்ள இல்லத்தில், அவரை கைது செய்தனர். பின்னர் வசீகரனை சேலத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது போன்று அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை மக்களிடையே கொண்டு செல்லும் பலரும் இதை போல் கைது செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
Picture Courtesy : Polimer
Next Story