Top
undefined
Begin typing your search above and press return to search.

விமர்சனங்களை தகர்த்தெறியும் பிரதமரின் திட்டம்..? இந்திய உயர்கல்வி உலகத் தரத்துக்கு உயர்கிறது..!!

விமர்சனங்களை தகர்த்தெறியும் பிரதமரின் திட்டம்..? இந்திய உயர்கல்வி உலகத் தரத்துக்கு உயர்கிறது..!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 July 2018 11:07 AM GMT

இந்தியாவில் உயர் கல்வி குறித்து எதிர்மறையான கருத்துக்களை சில விஷமிகள் பரப்பி வரும் நிலையில், அத்தனை விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, உயர்கல்விக்கு நிதியளிக்கும் முகமை ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கல்வி உட்கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கல்விக்குப் பெருந்தொகை ஒதுக்கியதன்மூலம் இந்திய உயர்கல்வி உலகத் தரத்துக்கு உயரும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் உயர்கல்வி கற்பிக்கும் பிராந்திய மையமாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாகவும், வரும் 2030ம் ஆண்டில், உலக நாடுகளின் பட்டதாரிகளில் நான்கில் ஒருவர் இந்திய பட்டதாரியாக இருப்பர் எனவும், தற்போது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக இந்தியா 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் உயர்கல்வி நிதியளிக்கும் முகமையிடம் இருந்து நிதிபெறும். இதை அரசே திருப்பிச் செலுத்தும். ஐஐடி, என்ஐடி, இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியனவும் உயர்கல்வி நிதியளிக்கும் முகமையிடம் இருந்து நிதி பெறும்.
2013-2014நிதியாண்டில் கல்வித்துறைக்கு 65ஆயிரத்து 867கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், நடப்பாண்டில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story