Top
undefined
Begin typing your search above and press return to search.

விமான பயணிகள் தவிப்பு : களத்தில் இறங்கி கலக்கிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்

விமான பயணிகள் தவிப்பு : களத்தில் இறங்கி கலக்கிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 July 2018 6:11 PM GMT

சென்னை விமான நிலையம், உள்நாட்டு முனையத்தில் இருந்து, 4 ஜூலை 2018 - அன்று, காலை 10.30 மணிக்கு அந்தமானுக்கு செல்ல இருந்த ஏர்-இந்தியா விமானம், ரத்து  செய்யப்பட்டது என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டது. விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள், சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள், மீண்டும் அந்தமான் செல்ல விமான நிலையத்தில் தயாராக இருந்தனர் எனவும், அப்போது, விமானம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பயணிகள் வீட்டிற்கு செல்லவும் எனவும் ஏர் இந்தியா விமான அதிகாரிகள் தெரிவித்தனர். பரமக்குடி,ராமேஸ்வரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து அந்தமான் செல்ல வந்தவர்கள், இந்த அறிவிப்பை கேட்டு ஆத்திரமடைந்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது களத்தில் இறங்கிய பா.ஜ.க தமிழக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், அதிகாரிகளுடன் பேசி மாற்று ஏற்பாடு செய்தார். இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, பயணிகளிடம் சமாதானம் பேசினார். பின்னர், ஏர்-இந்தியா அதிகாரிகளுடன் பேசி, பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.


இதையடுத்து பயணிகளை சென்னையில் தங்க வைக்க ஏர் இந்தியா விமான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மறுநாள், அந்தமான் செல்லும் விமானத்தில் பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.


தமிழகத்தில் பெருமளவில் இடம் பிடிக்காத பா.ஜ.க, அரசியல் காரணங்கள் பார்க்காமல், இது போன்ற மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து சரி செய்வது மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.


Inputs and Picture courtesy : Thanthi TV

Next Story