Top
undefined
Begin typing your search above and press return to search.

கழிப்பறை வசதி, குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, ஜி.பி.எஸ், சி.சி.டி.வி கேமரா போன்ற சிறப்பு அம்சங்களுடன் புத்தம் புதிய தமிழக அரசு பேருந்துகள்

கழிப்பறை வசதி, குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, ஜி.பி.எஸ், சி.சி.டி.வி கேமரா போன்ற சிறப்பு அம்சங்களுடன் புத்தம் புதிய தமிழக அரசு பேருந்துகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 July 2018 6:40 PM GMT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ₹ 314 கோடி செலவில் கழிப்பறை, குளிர்சாதன, படுக்கை வசதியுடன் கூடிய 515 புதிய அரசு சொகுசு பேருந்து சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 3 2018) அன்று கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 3000-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இந்த முன்னேற்றங்கள் நடந்துள்ளன. தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் உள்ளன. குளிர்சாதனம், படுக்கை வசதிகள், கழிப்பறை, ஜி.பி.எஸ், சி.சி.டி.வி கேமரா வசதிகள் கொண்ட 515 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 266 பேருந்துகளும், மீதமுள்ள பேருந்துகளின் சேவை அந்தந்த மாவட்டங்களில் இருந்தும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்தின் கட்டணம் ₹ 975 ஆகும். சென்னை-மதுரை குளிர்சாதன வசதி அல்லாத படுக்கை வசதி பேருந்துக்கு ₹ 725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக்கு ₹ 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வனத்துற அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Picture Courtesy : Dinakaran
Next Story