Top
undefined
Begin typing your search above and press return to search.

மருத்துவம் பயில இருக்கும் கூலித் தொழிலாளியின் மகன் - நீட் தேர்வால் கிடைத்த வாய்ப்பு : பெற்றோர்கள் மகிழ்ச்சி

மருத்துவம் பயில இருக்கும் கூலித் தொழிலாளியின் மகன் - நீட் தேர்வால் கிடைத்த வாய்ப்பு : பெற்றோர்கள் மகிழ்ச்சி

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 July 2018 6:33 PM GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ஜெயசரண். இவர், நீட் தேர்வு எழுதி, 416 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜெயசரனுக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவன் ஜெய்சரண் கூறுகையில், "என்னுடைய பொது ரேங்கிங்கில் 972-வது இடமும், B.C ரேங்கிங்கில் 589-வது இடமும் கிடைத்துள்ளது. இதனால் எனக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பள்ளியில் உள்ள அகாடமியில் தான் நான் பயிற்சி பெற்றேன்", என்று கூறியுள்ளார்.
தனது மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளதால், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீட் தேர்வு என்று ஒன்று இல்லாமல் போயிருந்தால் இவரை போன்ற திறமை மிக்க ஏழை மாணவர்கள், கோடி கணக்கில் செலவு செய்து தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
Pic Courtesy : Thanthi TV
Next Story