Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தின் பலனை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அதற்கு எதிராக பொது கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் : உயர் நீதிமன்றம்

சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தின் பலனை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அதற்கு எதிராக பொது கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் : உயர் நீதிமன்றம்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 July 2018 7:34 AM GMT

8 வழித்தடங்கள் கொண்ட சென்னை -சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்தின் பலனை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அதற்கு எதிராக பொது கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் நீதிமன்றம் நீதிபதி ராஜா, த.மா.கா சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் என  பாலிமர் செய்தி குறிப்பிட்டுள்ளது.

த.மா.கா- வின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திர குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் சாத்தூர் மாரியம்மன் கோயில் திடலில் வருகிற 8ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த, அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.



உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா முன்பு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி அளித்த மனுக்கள் காவல்துறையினரால் பரிசீலிக்க படவில்லை என மனுதரார் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்தவிட்டார் நீதிபதி ராஜா. பசுமைவழிச்சாலை திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் இருந்த வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டதற்கு பெரும்பாலான வழக்கறிஞர்கள் திட்டத்தை வரவேற்று கருத்து தெரிவித்தை சுட்டிகாட்டினார் நீதிபதி.
இந்த திட்டம் இருபெரும் நகரங்களுக்கு இடையே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் என்றும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமையவும் இந்த திட்டம் வாய்ப்பளிக்கும் என்றும் நீதிபதி ராஜா குறிப்பிட்டார்.
சரக்குகள் குறித்த நேரத்தில் சென்றடையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய நீதிபதி ராஜா, இதற்கு எதிராக பொது கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, தமாகா சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story