Top
undefined
Begin typing your search above and press return to search.

சந்தன போட்டு வைத்ததால் ஐந்தாம் வகுப்பு மாணவி மதராசாவிலிருந்து வெளியேற்றம்- கேரளாவில் தலையெடுக்கிறதா Talibanism ?

சந்தன போட்டு வைத்ததால் ஐந்தாம் வகுப்பு மாணவி மதராசாவிலிருந்து வெளியேற்றம்- கேரளாவில் தலையெடுக்கிறதா Talibanism ?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 July 2018 6:58 AM GMT

கேரளாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நெற்றியில் சந்தன போட்டு வைத்ததால் மதராசாவிலிருந்து வெளியேற்றபட்டுள்ளார். மாணவி குறும்படத்தில் நடிப்பதற்காக சந்தன போட்டு வைத்ததாக தெரிகிறது. உமர் மலையில் (Ummer Malayil ) தனது facebook பதிவில் தனது மகள் கல்வீச்சிற்கு ஆளாகாமல் தப்பித்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். தாலிபானிசம் கேரளாவில் தலையெடுக்கிறதா ?
“எனது மகள் ஹென்னா ஒரு குறும்படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன திலகத்துடன் மதராசாவிற்கு சென்றார். எனது மகள் பேச்சு ஆற்றல், பாடும் ஆற்றல் போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர். பள்ளியிலும் , மதராசாவிலும் முதல் மாணவி. மாவட்ட அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளார். ஐந்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் ஐந்தாம் இடம். இவ்வளவு திறமைகள் இருந்தும் , நெற்றியில் சந்தன போட்டு வைத்ததால் மதராசாவிலுருந்து வெளியேற்றப்பட்டது எந்த விதத்தில் நியாயம். நல்ல வேலை என் மகளை கற்களால் தாக்கவில்லை” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 5000 Reactions மற்றும் 1700 shares பெற்றுள்ளது. இவரின் துணிச்சலை அனைவரும் பாராட்டியுள்ளனர். சந்தன திலகம் இஸ்லாமியத்திற்கு எதிரானது அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், இஸ்லாமியர்கள் ஷரியா சட்டத்தின் படி உண்மையான இஸ்லாமியர் படங்களில் நடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் கிடையாது என தெரிவித்துள்ளனர். இந்த செயல் கேரளாவில் Talibanism தலையெடுப்பதை காட்டியுள்ளது.
Next Story