Top
undefined
Begin typing your search above and press return to search.

போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு

போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  8 July 2018 8:28 AM GMT

போலி பாஸ்போர்ட் தயாரித்து நூற்றுக் கணக்கானோரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் உட்பட பத்து பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


கைது செய்ப்பட்டவர்கள், வெளிநாடு படப்பிடிப்புகளுக்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையாளர், எ.K . விஸ்வநாதனின் உத்தரவின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் வீரகுமார் மற்றும் பாலாஜி, குணாலன், தனபால், சரவணன், கார்த்திகேயன், அம்ஜித் குமார், பாலசுப்ரமணியன், உமர் ஹுசைன், சக்திவேல் ஆகிய பத்து பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story