Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பில், தேவாலயமே பாதிரியார்களுக்கு உதவியுள்ளது : தேசிய மகளிர் ஆணைய (NCW) தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பில், தேவாலயமே பாதிரியார்களுக்கு உதவியுள்ளது : தேசிய மகளிர் ஆணைய (NCW) தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  8 July 2018 8:50 AM GMT

கேரளாவில் ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து ஒரு திருமணமான பெண்ணை பாலியல் இரையாக்கிய கொடுமையை அடுத்து, தேசிய ஊடகங்களில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. பிறகு, காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணையும், மலங்கரா சிரியன் ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தின் தலைமை பிஷப், யூஹனோன் கிறிஸ்தோதாமஸ் அவர்களையும் நேற்று (7 ஜூலை 2018) சந்தித்து பேசியுள்ளார்.

பிறகு தனது ட்விட்டர் பதிவில் இதனை பதிவிட்ட ரேகா சர்மா அவர்கள், சில திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார்.


1) After meeting the victim, SSP,IO, I met The head bishop, Yuhanon christotomas and 2 others of Malankara syrian orthodox church at Baithini Ashram at Thiruvalla. pic.twitter.com/ozwzJ87js9


— rekha sharma (@sharmarekha)
July 7, 2018


"நான் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த பிறகு, மலங்கரா சிரியன் ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தின் தலைமை பிஷப், யூஹனோன் கிறிஸ்தோதாமஸ் அவர்களையும், தேவாலயத்தை சேர்ந்த மேலும் இருவரையும் சந்தித்து பேசினேன். ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டது குறித்து இவர்கள் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் மாறாக, குற்றம் புரிந்த பாதிரியார்களுக்கு உதவும் வகையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூல (Affidavit) நகலை பாதிரியார்களிடமே அளித்துள்ளனர். கேரள காவல் துறையினர் அவர்களையும் விசாரித்து, F.I.R-யில் அவர்களையும் இணைக்க வேண்டும்", என்று பதிவிட்டுள்ளார்.


2)They were supposed to have an enquiry on the incident of 5 priests raping woman and take action against them but they themselves handed the copy of the affidavit of woman
to the accused to help them. Kerala police need to question them and include their name in FIR.


— rekha sharma (@sharmarekha) July 7, 2018


"இந்த சம்பவத்தை யாரும் மூடி மறைக்க நான் விடமாட்டேன். அந்த பெண் சுதந்திரமாக வெளியே வந்து தனது வாழ்க்கையை வாழ உதவியாக இருப்பேன்", என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.


I will see that this matter won't be brushed under the carpet and help woman to come out and lead normal life


— rekha sharma (@sharmarekha) July 7, 2018


இவர் இவ்வாறு பதிவிட்டிருப்பது, தேவாலயங்கள் விசாரணை நடத்தும் முறை மீது நம்பிக்கையை இழக்க செய்வதுடன், தேவாலயங்கள், குற்றங்கள் புரிவோருக்கு ஆதரவாக நடப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.


Picture Courtesy : @sharmarekha Twitter Handle

Next Story