Top
undefined
Begin typing your search above and press return to search.

பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையை ₹1.2 லட்சத்திற்கு விற்ற அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் : 280 குழந்தைகள் பிறந்ததற்கான ஆவணங்களே இல்லை

பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையை ₹1.2 லட்சத்திற்கு விற்ற அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் : 280 குழந்தைகள் பிறந்ததற்கான ஆவணங்களே இல்லை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  8 July 2018 6:33 PM GMT




அன்னை தெரசா ஆரம்பித்த தொண்டு நிறுவனமான மிஷனரிஸ் ஆப் சாரிட்டியை சேர்ந்த கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள், பிஞ்சு குழந்தைகளை காசுக்காக விற்றுள்ளனர். இதை தொடர்ந்து  கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். ராஞ்சி குழந்தைகள் நல வாரிய தலைவர், ரூபா வர்மா அளித்த புகாரின் பேரில், அன்னை தெரசா ஆரம்பித்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய அணிமா இந்த்வார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்தியா டுடே செய்தி குறிப்பு கூறுகிறது. 


உத்தர பிரதேச மாநிலம், சோநேபாட்ரா மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், மே 1 ஆம் தேதி அன்று, ₹1.2 லட்சத்தை கொடுத்துள்ளனர். பிறகு, மே 14 அன்று குழந்தையை அந்த தம்பதியினரிடம் ஒப்படைத்துள்ளனர், கன்னியாஸ்திரிகள். ஆனால், கன்னியாஸ்திரிகள், மீண்டும் அந்த குழந்தையை தம்பதியிடம் இருந்து திரும்ப பெற்று கொண்டுள்ளனர். இதனால் அந்த தம்பதியினர், குழந்தைகள் நல வாரியத்தை அணுகியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிர்மல் ஹ்ருதாய் எனப்படும் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி, திருமணமாகாத அன்னையர்களின் காப்பாகமாக இருந்து வருகிறது. தற்போது விர்க்கப்பட்டுள்ள குழந்தையின் தாய், மார்ச் மாதம் அந்த காப்பாகத்தில் சேர்ந்துள்ளார். மே 1 ஆம் தேதி அன்று குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த குழந்தை, குழந்தைகள் நல வாரியத்தின் பாதுகாப்பில் உள்ளது.


அன்னை தெரசாவால் ஆரம்பிக்கப்பட்ட பல காப்பகங்களில், 2015 முதல் 2018 வரை, 450 கர்பினி பெண்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதில் 170 குழந்தைகள் பிறந்ததற்கான ஆவணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மீதம் 280 குழந்தைகள் பிறந்ததற்கான ஆவணங்கள் இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 


இந்த வழக்கை காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட கர்பினி பெண்கள் மற்றும் குழைந்தைகள் பிறந்ததற்கான ஆவணங்களை காவல்துறை சரி பார்த்து வருவதாகவும், அதில் குளறுபடிகள் தென்படுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இது போன்று மதத்தின் பெயரில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருந்து ஆதரவையும், நிதி உதவி அளிப்பபவர்களையும் காவல் துறை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.





Next Story