Top
undefined
Begin typing your search above and press return to search.

பாதுகாப்பை உறுதி செய்து பல சாதனைகளை படைத்திருக்கிறது இரயில்வே துறை

பாதுகாப்பை உறுதி செய்து  பல சாதனைகளை படைத்திருக்கிறது இரயில்வே துறை

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 July 2018 1:20 PM GMT

நம் நாட்டில், இரயில் சேவையில் முன்னேற்றம் என்ற பெயரில், நடந்து வந்த வெற்று அலங்கார வேலைபாடுகள் எல்லாம் முடிந்து மலையேறிவிட்டன. கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பாஜக அரசு, நம் நாட்டு குடிமக்களின் இரயில் பயணத்தை பாதுகாப்பானதாகவும், மேம்படுத்தியதாகவும் மாற்றுவோம் என அளித்த வாக்குறுதியின் ஒவ்வொறு வார்த்தையையும் உணர்ந்து காப்பாற்றியுள்ளது. பியுஷ் கோஷல் அவர்களால் தலைமையேற்கப்பட்டிருக்கும் இந்திய இரயில்வே துறை சிறந்த இரயில்வே பாதுகாப்பை வழங்கியமைக்கான அறிக்கையை 2017-18ஆம் நிதியாண்டில் கொண்டிருக்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையின் படி 35 ஆண்டுகளுக்கு பிறகு இரயில்வே துறை இந்த நிதியாண்டில் 100 விபத்துகளுக்கும் குறைவான சம்பவங்களை சந்தித்துள்ளன. இந்திய இரயில்வேயின் இந்த பாதுகப்பு தரவானது கடந்த 57 ஆண்டுகளிலேயே சிறந்த சாதனையாக கருதப்படுகிறது.


அதிகாரப்பூர்வ தரவின் படி மார்ச் 30 வரை 73 விபத்துகள் இரயில்வே நெட்வர்க்கில் நிகழ்ந்துள்ளன, கடந்த நிதியாண்டில் இது 104 ஆக இருந்தது. இதுவே 57 ஆண்டுகளில் மிகக்குறைவான சம்பவமாக கருதப்படுகிறது. இந்த முன்னேற்றத்திற்கான  முக்கிய காரணம் பாதைகளை சீரமைத்திருப்பதே.  இரயில்வே துறை 2017-18 ஆம் ஆண்டினுள் கிட்டதட்ட 4,405 கிமீ  அளவிலான பழைய தண்டவாளங்களை புதுப்பித்துள்ளது. இருண்மை நிறைந்த பழைய தண்டாவளங்களே கணக்கிலடங்கா இரயில் தடம்புறதல்களுக்கு காரணமாக இருந்துள்ளன. மோடி அரசு சிக்னல் முறையை தரம் உயர்த்துவதோடு தண்டவாள பாதைகளை சிறப்பாக பராமரிக்கவும், மேம்படுத்தவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதற்கென பெரும் நிதியை அரசு விடுவித்திருப்பது அவர்களின் அற்பணிப்புணர்வையே காட்டுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு என்பது இரயில்வே துறையின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், இரயில்வே பட்ஜெட்டை நிதி பட்ஜெட்டுடன் இணைத்தது தவறு என்று கூறி வந்த எதிர்கட்சிகளின் கருத்தையும் தவறு என்று நிருபித்துள்ளது. இப்படி பட்ஜெட்டை இணைப்பதால் முன்னதனின் முக்கியத்துவம் குறையும் என அவர்கள் சொன்ன கருத்து பொய்யென இதன் மூலம் நிருபனம் ஆகியுள்ளது.


மேலும் இந்த நிதியாண்டு முன்னேப்பதோமில்லாத அளவு பெரும் தூரத்தை உள்ளடக்கியுள்ளது. 1960-61 வரை இரயில்கள் கூட்டாக  388.1 மில்லியன் இரயில் கி.மீ ஐ கடந்துள்ளது இதை 2017-18 உடன் ஒப்பிட்டு பார்த்தால் தற்போது இரயில்கள் கூட்டாக 1170.7 மில்லியன் இரயில் கி.மீ கடந்துள்ளது. இரயில் கி.மீ என்பது தூரத்தின் அளவீடு இது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நகரக்கூடிய இரயிலிற்கு தொடர்புடையது.  முந்தைய தரவுகளை ஒப்பிடுகையில், 2017-18 வரை  கூடதலாக 74 மில்லியன் இரயில் கி.மீ  தூரம் கடந்திருந்த போதும் பியுஷ்கோஷல் தலைமையிலான இரயில்வே துறையில் விபத்துகள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன.  விபத்துக்கள் என்பது கவலைக்குரிய விஷயமெனினும், 1960-61 நிகழ்ந்த விபத்துகள் 2131, இது குறைந்து 1970-71 வரை 840 விபத்துகள் நிகழ்ந்துள்ளன, பின் 1980-81 வரை அது 1,013 விபத்துகளாக குறைந்தது. 1990-91 வரை அது 532 ஆக இருந்தது, 2010-11 வரை 141 ஆகவும் இருந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கையும் குறைந்து வந்துள்ளது. 2016-17 வரையிலான இரயில் விபத்துகளில் 607 மக்கள் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர்.  2017 – 18 வரை இந்த எண்ணிகை 254 ஆக குறைந்தது.  அதே வேளையில் இரயில் தடம் புறல்தல் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2016-17 வரை 78 ஆக இருந்த சம்பவம், 2017-18 வரை 54 ஆக குறைந்துள்ளது. லெவல் க்ராஸிங்கில் நடைபெறும் விபத்துகள் 2017-18 வரை 15 ஆக உள்ளது இது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில்  30 என்ற எண்ணிக்கையிலிருந்து இத்தனை அளவில் குறைந்திருபது மகிழ்வான தரவு.


அதுமட்டுமின்றி 2017-18 ஆம் ஆண்டில்  1,160 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை மேற்கொண்டு பெரும் மைல்கல் ஒன்றை வகுத்துள்ளது நம் இரயில்வே துறை. இது தான் முன்பெப்போதுமிருக்கும் தரவுகளிலேயே உயர்ந்ததாக கருதப்படுகிறது. இதை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2016-17 வரை மொத்தம் 1,109 மில்லியன் டன் சரக்கு போக்குவரதே நிகழ்ந்திருந்தது. அறிக்கைகளின் படி  மொத்த சரக்கு போக்குவரத்து  என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் உயர்ந்துள்ளது.


இந்திய இரயில்வே துறை எடுத்திருக்கும் முக்கிய நடவடிக்கை என்பது பாதுகாப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது. இரயிலை இயக்குவது துவங்கி பனி காலங்களில் இரயில்களை சுமூகமாக இயக்க உள்ளூர் பைலட்களுக்கு ஜிபிஎஸ் செயல்படுத்தப்பட்ட  பனிக்கான பாஸ் கருவிகளுக்கான அடையாளங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த கருவி ஓடுதளத்தின் வரைபடத்தையும், சிக்னல்களையும், நிறுத்தங்கள் மற்றும் லெவல்க்ராசிங் மற்றும் 500 மீட்டருக்கு முன்பாகவே உள்ளூர் பைலட்களுக்கு எச்சரிக்கையை வழங்கும், அதன் மூலம் அவர் இரயிலின் வேகத்தை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். இரயில்வே துறை கட்டுமானத்தில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது, மனிதர்கள் கடப்பதற்கான பாதை மற்றும் பாலங்கள் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லாம்.


இந்த முயற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இரயில்வே துறை பியுஷ் கோஷலின் வழிகாட்டுதலின் கீழ் இரயில்வே உணவையும், பயணசீட்டு முறையையும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்துவது எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பியுஷ் கோஷல் அவர்கள் இந்நாட்டின் மற்றும் இரயில்வே துறையின் ஆகச்சிறந்த மற்றும் உறுதிமிக்க அமைச்சர் என்று சொன்னால் அது மிகையில்லை.

Next Story