Top
undefined
Begin typing your search above and press return to search.

39 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கேரள பாதிரியார் : தொடரும் கிறிஸ்துவ பாதிரியார்களின் கற்பழிப்புகள்

39 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கேரள பாதிரியார் : தொடரும் கிறிஸ்துவ பாதிரியார்களின் கற்பழிப்புகள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  10 July 2018 6:35 PM GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் இரையாக்கிய கொடுமை நடந்தது. அதற்கு, தேவாலயமே உதவி உள்ளது என்று, தேசிய மகளிர் ஆணைய தலைவி குற்றம் சாட்டின்னார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாக மேலும் ஒரு கற்பழிப்பு கிறிஸ்துவ பாதிரியாரால் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.



ஆலப்புழா அருகே, கயம்குலம் காவல் நிலையத்தில், 39 வயது பெண்மணி அளித்த புகாரின் பேரில், கிறிஸ்துவ பாதிரியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக
டைம்ஸ் ஆஃப் இந்தியா
 செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.


காவல் ஆய்வாளர், K சதான் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "கொய்ப்பளிகரண்மா ஆர்த்தோடொக்ஸ் தேவாலயத்தின் பாதிரியார், பின்னு ஜார்ஜ், 2014 ஆம் ஆண்டு அந்த பெண்ணை தனது அலுவலகத்திற்கு அழைத்து, கற்பழித்துள்ளார். குடும்ப பிரச்சனைகள் சம்பந்தமாக பேச வேண்டும் என்று அழைத்து, தனது அலுவலகத்தில் கற்பழித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று, அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பாதிரியார் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். தற்போது, ரன்னியில் உள்ள தேவாலயத்தில், அவர் பாதிரியாராக இருந்து வருகிறார். அவரின் வயது என்ன, தற்போது எங்கு இருக்கிறார் போன்ற தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவரை கண்டு பிடிக்க முயர்சித்து வருகிறோம்", என்று தெரிவித்துள்ளார்.

Next Story