Top
undefined
Begin typing your search above and press return to search.

எந்நேரத்திலும் அணை நிரம்பலாம்.. சமாளிக்குமா தமிழகம்..?

எந்நேரத்திலும் அணை நிரம்பலாம்.. சமாளிக்குமா தமிழகம்..?

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  14 July 2018 1:24 PM GMT

தற்பொழுது கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. உபரி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 123 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 42 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிகப்பட்டுள்ளது.
அணை நிரம்பியவுடன் உபரிநீர் முழுவதும் திறந்துவிடப்படும் என்பதால், கர்நாடகத்தில் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கபினி அணையும் நிரம்பி வழிவதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 46 ஆயிரத்து 210 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 41 புள்ளி நான்கு ஒன்று டிஎம்சியாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழகத்திற்கு வரும் தண்ணீரை, கடலில் வீணாக கலக்க விடமால், விவசாயிகளுக்கு பயன் படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Next Story