Top
undefined
Begin typing your search above and press return to search.

திரும்பி போ ஸ்டாலின் ( #GoBackStalin ) - தேசிய அளவில் கப்பலேறியது திமுகவின் மானம்..!

திரும்பி போ ஸ்டாலின் ( #GoBackStalin ) - தேசிய அளவில் கப்பலேறியது திமுகவின் மானம்..!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 July 2018 3:12 PM GMT

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் விளையாட்டு போட்டிபார்க்க சென்று விட்டு, லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளதையொட்டி #GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


கடந்த ஜூலை 10 ஆம் தேதி திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் சென்றார். உடன் அவரது மனைவி மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். லண்டனில் ஒரு வாரம் தங்கியிருந்துவிட்டு இருவரும் சென்னை இன்று திரும்புகிறார்கள்.


இந்நிலையில், லண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி, ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டரில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  #GoBackStalin (திரும்பி போ ஸ்டாலின்) என்ற  ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது. தேசிய அளவில் டிரெண்ட் ஆகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பாஜக தலைவர்கள் தமிழகம் வரும் பொழுது திமுகவினர் இது போன்று எதிர்ப்பு காட்டிய நிலையில், இன்றைக்கே அவர்கள் ஏவிய ஆயுதமே அவர்களை தாக்குவது அரசியல் வட்டாரத்தில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story