Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய மொழிகளில் கவனம் செலுத்தும் கூகுள்

இந்திய மொழிகளில் கவனம் செலுத்தும் கூகுள்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 July 2018 5:11 AM GMT

உலகளவில் இணைய சந்தையில் இரண்டாமிடத்தில் உள்ளது இந்திய நாடு. இங்கு இணைய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க இணைய நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் சூழலில் டிஜிட்டல் இந்தியா என்ற மத்திய அரசின் திட்டம், அவர்களுக்கு எளிமையாக வழி அமைத்துக்கொடுத்துள்ளது.
முக்கியமாக, எல்லா துறைகளும் மின்னணுமயமாக்கும் மத்திய அரசின் நோக்கம், தொழில்நுட்ப பயன்பாட்டில் உலகளவில் முந்தி இருக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. கூகுள் என்கிற உலகின் மிக பெரிய இணைய தேடு பொறி, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தோடு கைக்கோர்த்து, பல்வேறு திட்டப்பணிகளை வகுத்து வருகிறது.
தொழில்முனைவோர்களை இணையத்தில் இழுக்க, உள்ளூர் மொழிகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது கூகுள். ஆங்கிலம் பேச தெரியாத 20 கோடி இந்தியர்களை இணையத்திற்குள் நுழைக்க கூகுளின் இந்த முயற்சி அழிந்தொழியும் மொழிகளுக்கு மறு உயிர்ப்பாக அமையும்.
குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அதில் இணையப் பயன்பாடும் உயருகிறது.இதன் பொருட்டு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவும் இனி உயரும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.
reference: zhakanini
Next Story